
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனை அரச மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கான அனைத்து ஆவணத் தயாரிப்புப் பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் நான்கு பேர் கொண்ட அரச குழு இன்று திங்கட்கிழமை சவூதி அரேபியா செல்லவுள்ளது. அதன்பிரகாரம் அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை குறைப்பது, அவரை விடுவித்துக்கொள்வது குறித்துப் பேச்சு நடத்துவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணிகள் உட்பட நான்கு பேர் கொண்ட தூதுக்குழு இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கருணை மனுவுடன் சவூதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
மூத்த சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோரும் இந்தத் தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.இந்தக் குழு, எதிர்வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை சவூதி அரேபியாவில் உள்ள இரண்டு சட்டவாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தவுள்ளது.அனோஜனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி, பௌத்த, முஸ்லிம், இந்து மக்களும் மதத் தலைவர்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதங்களை வழங்கியுள்ளனர்.இதற்கிடையே, அனோஜன் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அவரை விடுதலை செய்யக் கோரும் மேல்முறையீட்டிற்கு 10 நாட்களுக்கும் குறைவான நாட்களே உள்ளதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளன. இவ்விவகாரம் தொடர்பாக அனைத்துலக மன்னிப்புச் சபை சவூதி அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், பல அனைத்துலக அமைப்புகளும் அனோஜனை விடுதலை செய்யக் கோரி சவூதி அரசுக்குக் கடிதங்கள் அனுப்பியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
thinakaran

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments