
கிராமத்தின் ஓரத்தில் இருக்கும் சிறிய தெரு.
அந்த தெருவின் முடிவில் ஒரு சிறிய வீடு.
அந்த வீட்டின் வாசலில் தினமும் ஒரு பெண் அமர்ந்திருப்பாள்.
அவள் பெயர்,லலிதா.
அவள் கண்களில் எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
ஒரு முகம்…ஒரு குரல்…
ஒரு வருகை…அவன் பெயர் லலித் .லலித்தும் லலிதாவும் ஒரே ஊரில் வளர்ந்தவர்கள்.
சின்ன வயதில் ஒரே தெருவில் விளையாடியவர்கள்.
வயது வளர வளர அந்த நட்பு மெதுவாக காதலாக மாறியது.
லலித் எதையும் அதிகம் பேசமாட்டான்.ஆனால் அவன் பார்வை மட்டும் எப்போதும் லலிதாவைத் தேடும்.
லலிதா அவனை நம்பினாள்.
அவன் வாழ்க்கையில் ஒரு நாள் “நாம்” ஆகிவிடுவோம் என்று கனவு கண்டாள்.
ஒருநாள்…
லலித் நகரத்துக்குப் போவதாக சொன்னான்.
வேலை வாய்ப்பு.
வாழ்க்கை மாற்றம்.
லலிதா சிரித்தாள்.
சீக்கிரம் திரும்பி வருவியா?”
அவன் மெதுவாக சொன்னான்:
“வருவேன்…”
ஆனால் அந்த “வருவேன்” என்ற வார்த்தை…ஒரு பொய்யாக மாறியது.
நாட்கள் கடந்தன.
மாதங்கள் கடந்தன.
லலித் வரவில்லை.
லலிதா தினமும் காத்திருந்தாள்.தெரு முனையில் அமர்ந்து.காற்றைப் பார்த்து ,ஒவ்வொரு சத்தத்தையும்
அவன் என்று நினைத்து....ஆனால் அவன் வரவில்லை.
இரவு நேரங்களில் அவள் கண்கள் உறங்கவில்லை.
தலையணை அவளின் கண்ணீரை மட்டும் கண்டது.
யாரிடம் சொல்வேன் இந்த வலியை என்று அவள் மனம் அழுதது.
ஒருநாள்…
லலித் திரும்பி வந்தான்.
ஆனால் அவன் முகத்தில் சோர்வு.கண்களில் மௌனம்.
லலிதா ஓடிச் சென்றாள்
“நீ வந்துட்டியா…”
அவன் தலை குனிந்தான்.
“நான் வரணும் நினைச்சேன் ஆனா வாழ்க்கை என்னை தடுத்து விட்டது.
லலிதா கேட்டாள்:
“நான் காத்திருந்தேன் தெரியுமா?”
லலித் மெதுவாக சொன்னான்:
“நானும் காத்திருந்தேன் ஆனால் என் நிலை உன்னோட வர முடியாத மாதிரி இருந்தது.
மௌனம் இருவரையும் சூழ்ந்தது.வார்த்தைகள் எல்லாம் இழந்துவிட்டன.லலிதா மெதுவாக சொன்னாள்:
“நீ வரலன்னு நான் தப்பா நினைச்சேன்…”
லலித் சொன்னான்:
“நீ காத்திருந்தது எனக்கு தெரியும்.ஆனா சில காதல்கள் சேர முடியாமலேயே அழகாக இருக்கும்.
அன்று இருவரும் புரிந்துகொண்டார்கள்.
காதல் இருந்தாலும்நேரம் சில நேரம் அதை பிரித்து விடும்.
இன்று
லலிதா இன்னும் அந்த தெரு முனையில் அமர்கிறாள்.
ஆனால் இப்போது காத்திருப்பு இல்லை.
ஒரு நினைவு மட்டும்.
லலித் நகரத்தில் வாழ்கிறான்.
ஆனால் அவன் மனதில் ஒரு இடம் மட்டும் காலியாக இருக்கிறது.
நாம் இருவரும் காத்திருந்தோம்.
ஆனால் வாழ்க்கை நம்மை சந்திக்க விடவில்லை.
தளவாய் - இ. சாந்தா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments