Ticker

6/recent/ticker-posts

தென்கொரிய நாடாளுமன்றக் கூட்டத்தில், சீன ரோபோக்களை காட்சிப்படுத்திய உறுப்பினர்!


தென் கொரியாவை விட சீனா எவ்வளவு வேகமாக முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை அனைவருக்கும் உணர்த்தவே எம்பி லீ ஜங்-ஹியோன் இந்த ரோபோக்களைக் கொண்டு வந்தாக கூறப்படுகிறது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட மனித உருவ ரோபோக்கள் தென் கொரிய நாடாளுமன்றக் கூட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

தென் கொரியாவின் ஆளும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஜங்-ஹியோன்(Lee Jung-heon) சீனாவிலில் தயாரிக்கப்பட்ட ஜி1 மற்றும் அஜிபாட்ஸ் எக்ஸ்2 (AgiBot's X2) ஆகிய ரோபோக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்.

தென் கொரிய நாடாளுமன்றத்தின் அறிவியல், தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புக் குழு நடத்திய தணிக்கைக் கூட்டத்தில் (Parliamentary Audit) இந்த சுவாரசியமான நிகழ்வு அரங்கேறியது. லீ ஜங்-ஹியோன் (Lee Jung-heon), அதிநவீன மனித உருவ ரோபோக்களை நேரடியாக நாடாளுமன்ற கூட்ட அரங்குக்குள் கொண்டு வந்தபோது, நாடாளுமன்றத்திற்கு வந்த 2 ரோபோக்கள் அங்கிருந்தவர்களுக்கு கைகளை கொடுத்து வாழ்த்து தெரிவித்தன. அதனை தொடர்ந்து, தற்காப்பு கலை மற்றும் நடனமாடி இரண்டு ரோபோக்கள் அசத்தின.
மனித உருவ ரோபோக்கள் சார்ந்த உலகளாவிய காப்புரிமைகளில் சீனாவின் பங்கு 60.8% ஆக உள்ளது என்றும் ஆனால், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தென் கொரியாவின் பங்கு வெறும் 4.6% மட்டுமே இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஜங்-ஹியோன் கூறினார். தென் கொரியாவை விட சீனா எவ்வளவு வேகமாக முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை அனைவருக்கும் உணர்த்தவே எம்பி லீ ஜங்-ஹியோன் இந்த ரோபோக்களைக் கொண்டு வந்தாக கூறப்படுகிறது.

news18


 


Post a Comment

0 Comments