Ticker

6/recent/ticker-posts

நாமல் ராஜபக்சவுக்கு பெரும் நிம்மதி!


கலகொட அத்தே ஞானசார தேரரை முன்னிறுத்தி நடத்தப்படும் போலிப் போராட்டங்களின் உண்மையான நோக்கம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

“வேறொரு ஜனாதிபதியை நியமித்தாவது எமது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வோம்” என்று பலாங்கொட கஸ்ஸப தேரர் நேற்று (19) வலியுறுத்தியுள்ளார்.

சிறு குழுவைச் சேர்ந்த பிக்குகளை முன்னிறுத்தி கண்டியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பாதயாத்திரையின் பின்னணியில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எதிர்க்கட்சியின் தலையீடு வெளிப்பட்டது.

ஏற்பாட்டாளர்களுக்கு இடையிலான உள்மோதல்களும், ராஜபக்ச சார்பு பிக்குகளுக்கு இடையிலான முரண்பாடுகளும் இந்தப் பாதயாத்திரை முடிவுக்கு வருவதற்குக் காரணமாக அமைந்தன.

எனினும், தற்போது கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் தங்கியுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சிலர் தொடர்ந்து முன்னெடுத்து வரும் போராட்டம், நாமல் ராஜபக்ச தலைமையிலான ராஜபக்ச குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகவே நடத்தப்படுகிறது என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

lankatruth


 


Post a Comment

0 Comments