
நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை அடுத்து, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரைக் கைது செய்வதற்கான திறந்த பிடிஆணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை (01) அன்று பிறப்பித்தது.
காவல்துறை மா அதிபர் ஊடாக இந்தப் பிடியாணையினை நிறைவேற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதியரசர்களான மாயாதுன்ன கொரியா மற்றும் லக்மாலி கருணாநாயக்க ஆகியோர் அடங்கிய இரு நீதியரசர்கள் கொண்ட அமர்வே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments