
இரவு 8 மணி நிலவரப்படி காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு தீவின் அனைத்துப் பகுதிகளிலும் மிதமான அளவில் உள்ளது.
மத்தியப் பகுதியில் ஆக அதிகமாக அது 99ஆக உள்ளது.
மேற்குப் பகுதி - 93
கிழக்குப் பகுதி - 78
தெற்குப் பகுதி- 75
வடக்குப் பகுதி - 70
இந்தோனேசியாவின் கலிமந்தான் (Kalimantan), சுமத்ரா (Sumatra) வட்டாரங்களில் வறண்ட வானிலை நீடிக்கிறது.
அடுத்த 24 மணிநேரத்துக்குக் காற்றின் தரம் மிதமான நிலைக்கும் ஆரோக்கியமற்ற நிலைக்கும் இடைப்பட்டிருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
24 மணிநேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீட்டின் அடிப்படையில் வெளிப்புற நடவடிக்கைகளைத் திட்டமிடும்படி தேசியச் சுற்றுப்புற அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments