
அமெரிக்காவின் ஜார்ஜியா (Georgia) மாநிலத்தில் roller coaster சவாரியில் விபத்து ஏற்பட்டதில் ஒருவர் மாண்டார்.
பலருக்குக் காயம் ஏற்பட்டிருக்கிறது.
நேற்று Six Flags நிறுவனத்தின் உல்லாசப் பூங்காவில் சம்பவம் நடந்தது.
காவல்துறை சம்பவத்தை விசாரிக்கிறது.
சவாரியிலிருந்து ஒருவர் விழுந்ததாகப் பல ஊடகங்கள் தெரிவித்தன. சம்பவத்தைக் கண்டவர்கள் அவ்வாறு சொன்னதாக அவை குறிப்பிட்டன. அந்தத் தகவலைக் காவல்துறை உறுதிப்படுத்தவில்லை.
சவாரி மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தை எட்டும். சுமார் 61 மீட்டர் உயரத்துக்குச் சென்று அங்கிருந்து கீழே இறங்கும்.
Six Flags, அதிகாரிகள் நடத்தும் விசாரணைக்கு உதவி வருவதாக நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
சவாரியிலிருந்து பயணிகள் அவசரமாக வெளியேற்றப்படும் காணொளிகள் இணையத்தில் பரவுகின்றன.
பலர் சவாரியின் தண்டவாளத்தில் நடந்து மேலிருந்து கீழ் இறங்கிவரும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.
சென்ற மாதம் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள Six Flags roller coaster சவாரி நிரந்தரமாக மூடப்பட்டது.
அதில் சென்ற ஒருவருக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டதாக வழக்குத் தொடுக்கப்பட்டது.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments