Ticker

6/recent/ticker-posts

24 மணி நேரத்தில் ... ஈரான் மீது அணு ஆயுதத் தாக்குதல் ? அதிர்ச்சியில் உலக நாடுகள்


அமெரிக்கா ஈரான் இடையே மீண்டும் ராணுவ மோதல் ஏற்படும் என அச்சம் நிலவுகிறது. இந்நிலையில், அணுஆயுத தாக்குதலில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகள் குறித்து ஈரான் அரசுத் தொலைக்காட்சி விழிப்புணர்வு வீடியோவை ஒளிபரப்பியது. இந்தக் காணொளியை சமூக வலைதளப் பயனாளர்கள் தற்போது பகிர்ந்து வருகின்றனர்.

ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்த அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் தயாராகி வருகின்றன. ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. முதலில், இத்தகைய அச்சம் தேவையற்றது என்றும் புரளிகளாக இருக்கலாம் என்றுமட்டுமே கருதப்பட்டன. ஆனால், அமெரிக்காவின் முன்னணி ஊடகவியலாளர் டக்கர் கார்ல்சன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தால் எச்சரிக்கை பதிவொன்றை வெளியிட்டார். அதில்,"மவுண்ட் ஆக்ஸ்" எனப்படும் ஈரானின் அணுசக்தி தளத்தின் மீது அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும்,  இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேலின் அழுத்தமே காரணம் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், அணுஆயுத தாக்குதல் நிகழும்போது பொதுமக்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை ஈரான் அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளதாகக் கூறி, சமூக வலைதளங்களில் காணொளி பரப்பப்பட்டு வருகிறது.

குடியிருப்புப் பகுதிக்கு அருகே அணுஆயுத தாக்குதல் நிகழ்வது போன்று சித்தரிக்கப்பட்டுள்ள அந்த வீடியோவில், அணுவெடிப்பின் ஒளியை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்க்குமாறும், கட்டிடங்கள் மற்றும் பாதாள நிலவறைகளில் தஞ்சம் அடையுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஜன்னல்களில் இருந்து விலகியிருக்க வேண்டும், காற்று வரக்கூடிய துவாரங்களை மூட வேண்டும் மற்றும் கதிரியக்கத் தூசிகளிடம் இருந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது .

கதிர்வீச்சுப் பாதிப்பில் இருந்து தப்பிக்க, வெதுவெதுப்பான நீர் மற்றும் சோப்பைப் பயன்படுத்திக் குளிக்க வேண்டும் என்றும், கண்டிஷனர் இல்லாத சாதாரண ஷாம்பூவைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குளிக்க முடியாத பட்சத்தில், முகம், கைகள் மற்றும் வெளியில் தெரியக்கூடிய சருமப் பகுதிகளை நீர் அல்லது ஈரமான திசுத்தாள்களால் சுத்தம் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. பாட்டில் குடிநீர் மற்றும் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும், குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்குப் பாதுகாப்பு மையங்களிலேயே இருக்கத் தயாராக வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்க ஊடகவியலாளர் டக்கர் கார்ல்சன் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இக் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஒருவேளை அணுத் தாக்குதல் நடத்தப்பட்டால், அது சர்வதேசப் பிரச்சனையாக உருவெடுக்கக்கூடும். இதன் தாக்கம் பல லட்சம் கிலோமீட்டர் தூரம் வரை இருக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இரண்டாம் உலகப்போரின் போது, முதல் குண்டு ஹிரோஷிமாவில் ஆகஸ்ட் 6, 1945 அன்றும் இரண்டு நாட்கள் இடைவெளியில் அடுத்த குண்டு நாகசாகியிலும் வீசப்பட்டது. பல லட்சம் உயிர்கள் மேய்ந்தன. அதோடு ஜப்பான் சரணடைந்தது. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது.  உடல் ரீதியாகவும், உளரீதியாகவும்  அம்மக்களால் அந்த கோரத்தில் இருந்து இன்று வரை  தப்பித்து வெளியே வரமுடியவில்லை.

news18


 


Post a Comment

0 Comments