
நியூசிலாந்துக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்தியா வென்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் ஷுப்மன் கில், நியூசிலாந்தை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, அர்ஷ்டீப் சிங் (4), குர்னூர் பிறார், அன்ஷுல் கம்போஜ்ஜிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 40.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் டிம் செய்ஃபேர்ட் 38 (43), பிளையர் டிக்னர் 34 (23), கிளென் பிலிப்ஸ் 30 (51), டரைல் மிற்செல் 28 (41) ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு 186 ஓட்டங்ளை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியாவின் இனிங்ஸில் மழை குறுக்கிட்ட நிலையில் டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ன் முறைப்படி 32 ஓவர்களில் 143 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் விராட் கோலியின் 74 (51) ஓட்டங்களோடு 22.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்தியா வெற்றியிலக்கையடைந்தது. கில் 37 (56) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ஜேக்கப் டஃபி 3, கைல் ஜேமிஸன், நாதன் ஸ்மித் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இப்போட்டியின் நாயகனாக கம்போஜ் தெரிவானார்.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments