Ticker

6/recent/ticker-posts

ரூ.9.6 லட்சம் பரிசு : ’ஸ்லீப் சாம்பியன்’ பட்டத்தை வென்ற யுவதி


தூங்குவதற்கே சம்பளம் வழங்கப்பட்டால் எப்படியிருக்கும்? அதுவும் 60 நாட்கள் தூங்கி ரூ.9.6 லட்சத்தைப் பரிசாக வென்றால் ஆச்சரியம்தானே! மும்பையைச் சேர்ந்த ஜீனியா சட்டர்ஜி என்பவர், வேக்ஃபிட் (Wakefit) நிறுவனம் நடத்திய வித்தியாசமான போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் ‘ஸ்லீப் சாம்பியன்’ பட்டத்தைத் தட்டியுள்ளார்.

நாடு முழுவதும் இருந்து 2 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்த இந்தப் போட்டியில் பல கட்டத் தேர்வுகளுக்குப் பிறகு 10 பேர் மட்டுமே இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சுமார் இரண்டு மாதங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் பங்கேற்பாளர்கள் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, தங்களது தூக்க நேரம் மற்றும் தரத்தைப் பதிவு செய்ய வேண்டும். இவர்களின் செயல்பாடுகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுத் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

தூங்குவதுடன் மட்டுமின்றி, 'ஸ்லீப் சினிமா', 'ஸ்லீப் பிங்கோ' மற்றும் 'அண்டர்கவர் ஸ்லீப் மிஷன்' போன்ற சுவாரஸ்யமான வாராந்திர சவால்களிலும் பங்கேற்பாளர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

இறுதிச் சுற்றில் ஹோம் டெக்கரேஷன் மற்றும் படுக்கையறை வசதிகளை ஏலம் எடுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் ஜீனியா சட்டர்ஜி முதலிடத்தைப் பிடித்தார். அவருக்குப் பரிசுத் தொகையுடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

tamilmirror


 


Post a Comment

0 Comments