
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில், 12 முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறங்கிய நிலையில், அவர்களுள் செனட் சபைக்குத் தெரிவான முதல் முஸ்லிம் என்ற வரலாற்றுச் சாதனையை கலாநிதி அப்துல் எல்-செயத் படைத்துள்ளார்.
இறுதி முடிவுகளின்படி, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கலாநிதி அப்துல் எல்-செயத் 2,507,454 வாக்குகளைப் பெற்று (52.50%) வெற்றியடைந்துள்ள நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் மைக் ரோஜர்ஸ் 2,172,586 வாக்குகளை பெற்று (45.49%) தோல்வியைத் தழுவிக் கொண்டுள்ளார்.
எகிப்திலிருந்து அமெரிக்காவில் மிச்சிகன் மாநிலத்தில் வந்து குடியேறிய பெற்றோருக்கு 1984ம் ஆண்டு மகனாகப் பிறந்த இவர், மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டம் பெற்றவராவார்.
ரோட்ஸ் புலமைப் பரிசில் (Rhodes Scholarship) என்பது உலகின் மிகப் பழமையான மற்றும் மதிப்புமிக்க சர்வதேச முதுகலைப் புலமைப் பரிசில்களுள் ஒன்றாகும்.
இது மிகவும் போட்டி நிறைந்த புலமைப் பரிசிலாகும். இது ஒருவருக்குக் கிடைப்பதற்கு, வெறும் கல்வி மதிப்பெண்கள் மட்டும் போதாது – தலைமைத்துவம், சமூக சேவை, குணம் என்பன முக்கியமானதாகும்.
அந்தவகையில், 'ரோட்ஸ் புலமைப் பரிசில்' பெற்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பொது சுகாதாரத் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்ற நோயியல் நிபுணராவார்.
தனது 30வது வயதில் டெயிட் நகரின் சுகாதாரத் துறை இயக்குநராகப் பொறுப்பேற்ற இவர், அமெரிக்க வரலாற்றில் ஒரு பெரிய நகரின் மிக இளைய சுகாதார அதிகாரியாகப் பணியாற்றியவர் என்ற பெருமையைப் பெற்றார்.
2018ம் ஆண்டு மிச்சிகன் ஆளுநர் தேர்தலில் போட்டியிட்டு 30% வாக்குகள் பெற்று ஜனநாயகக் கட்சிக்குள் முக்கியத்துவம் பெற்ற ஒருவராக நுழைந்தார்.
இவரது இடதுசாரி முற்போக்குச் சிந்தனைகளும், மக்கள் நலக் கொள்கைகளும் குடியரசுக் கட்சியினரின் தீவிர விமர்சனத்திற்கு உள்ளாயின; தேர்தல் பிரச்சாரங்களின் போது, டொனால்ட் டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினர் இவர் மீது தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தியபோதிலும், தன்மீது சுமத்தப்பட்ட இனவாத மற்றும் மதவாதத் தாக்குதல்களை மிகவும் சாதுரியமாகவும், அரசியலமைப்புச் சட்டத்தின் படியும் எதிர்கொண்டார்.
இப்போது, 100 உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்க செனட் சபையில் நுழையும் முதல் முஸ்லிம் என்ற அந்தஸ்தை பெறும் இவர், ஒரு மருத்துவ நிபுணராக அமெரிக்காவின் விலையுயர்ந்த மருத்துவ அமைப்பை மாற்றி, அரசு நிதியுதவியுடன் கூடிய மருத்துவ உரிமையை அனைவருக்கும் வழங்க வலுவான குரலாகச் செயல்படுவார் என்பதில் அமெரிக்க மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இவரைத் தவிர, ஆடம் ஹமாவி, டரியலிசா அவிலா செவாலியர், அபர் கவாஸ், லெட்டீஷியா பிளம்மர், இல்ஹான் உமர், ரஷிதா தலேப், லத்தீஃபா சைமன், ஆயிஷா வஹாப், ருவா ரொம்மான், அப்பாஸ் அலாவிஹ், மரியம் கான் ஆகியோரும் இவ்விடைக்காலத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
ஆடம் ஹமாவி நியூஜெர்சியின் முதல் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராகவும்,
லெட்டீஷியா பிளம்மர் டெக்சாஸின் ஹாரிஸ் கவுண்டி நீதிபதி தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இத்தேர்தலில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நிலையில், முஸ்லிம் வேட்பாளர்களின் வெற்றியைக் கண்டு அமெரிக்க மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றனர் என்பதை அவர்களின் வெற்றிக் கொண்டாட்டங்களைக் கண்டு உறுதி செய்ய முடிகின்றது.
ஜனநாயகக் கட்சியின் அமோக வெற்றிக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க மக்கள் தன்னைப் பார்த்துச் சலிப்படைந்து விட்டால், தான் இஸ்ரேலுக்குச் சென்று அங்கு பிரதமராகப் பதவியேற்பதாக குறிப்பிட்டுள்ளமை உலக மக்களிடையே ஹாஸ்யத்துக்குள்ளான கருத்து ஒன்றாகப் பேசப்படுகின்றது!
அந்தவகையில், முஸ்லிம்களின் பெயர்களைக் கூட கொச்சைப்படுத்தி, கிண்டலடித்த டொனால்ட் ட்ரம்ப் மீது கடுமையான விமர்சனங்களை முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா அண்மையில் முன்வைத்துள்ளார்.
ஈரானுடன் தேவையற்ற போரைத் தொடங்கி, போருக்காகப் பல பில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டதால், சாதாரண அமெரிக்க மக்களின் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபர் 24 அன்று, ஓஹியோ மாகாணத்தின் கிளீவ்லேண்ட் நகரில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் பேசிய பராக் ஒபாமா, இந்தப் போர் யாருமே விரும்பிக் கேட்காத ஒன்று என்று வர்ணித்துள்ளார்.

தனது அதிபர் பதவிக் காலத்தில் உருவாக்கப்பட்ட 2015ம் ஆண்டு ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து டிரம்ப் விலகியதையும் அவர் கடுமையாக விமர்சித்தார்; தனது ஆட்சிக் காலத்தில் எந்தவொரு ஏவுகணையும் ஏவாமலேயே, இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் மூலம் ஈரான் அணு ஆயுதங்கள் உருவாக்குவதைத் தடுத்ததாகவும் குறிப்பிட்டார்.
அமெரிக்க ராணுவ வீரர்களின் உயிரிழப்புகள், கச்சா எண்ணெய் மற்றும் டீசல் விலைகள் உயர்வு பற்றியும் குறிப்பிட்ட அவர், இந்தப் போர் மாதாந்தம் பல பில்லியன் டாலர்களைச் செலவழித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், தவிர்த்திருக்கக்கூடிய ஒரு போரின் விளைவுகளை அமெரிக்க மக்கள் ஏன் தங்கள் மீது சுமக்க வேண்டியிருக்கின்றது என்று கூட கேள்வி எழுப்பினார்!
செம்மைத்துளியான்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments