
பேருந்துச் சேவை எண்ணைத் தெளிவாகக் காட்டும் வண்ணத் தகவல் திரை...
படிக்கட்டில் சிவப்பு, பச்சை விளக்குகள்...
சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் அறிமுகம் செய்யவிருக்கும் புதிய மின்சாரப் பேருந்துகளில் அந்த வசதிகளை எதிர்பார்க்கலாம்.
ஆணையம் 660 புதிய மின்சாரப் பேருந்துகளை அறிமுகம் செய்யவிருக்கிறது.
அவை இவ்வாண்டு இறுதியிலிருந்து கட்டங்கட்டமாகச் சேவைக்கு வரும்.
பயணிகளின் வசதிக்கும் பாதுகாப்புக்கும் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
- பேருந்துக்குள் நடந்து செல்லும் முக்கியப் பாதையில் படிகள் இருக்காது.
- சக்கர நாற்காலிப் பயணிகளுக்கான இடத்தில் மற்றவர்களும் பயன்படுத்த ஏதுவாய் மடித்து வைக்கக்கூடிய இருக்கைகள் அமைக்கப்படும்.
- பேருந்தின் பின்புறத்தில் வண்ணத் தகவல் திரை பொருத்தப்படும். அதில் சேவை எண்ணும் செல்லும் இடமும் காட்டப்படும்.
பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறதா..அங்கிருந்து புறப்படவிருக்கிறதா முதலிய விவரங்களையும் அதில் தெரிந்துகொள்ளலாம்.
சாலையில் உள்ள வாகனமோட்டிகளுக்கு அது உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
- ஈரடுக்குப் பேருந்துகளின் படிக்கட்டில் சிவப்பு, பச்சை விளக்குகள் இருக்கும்.
பேருந்து ஓடிக்கொண்டிருக்கும்போது சிவப்பு விளக்கு எரியும்.
பேருந்து நின்றுகொண்டிருக்கும்போது பச்சை விளக்கு எரியும்.
- விபத்து அபாயத்தை எச்சரிக்கும் கருவிகளும் ஓட்டுநர் சோர்வாக இருக்கிறாரா என்பதை கண்காணிக்கும் வசதியும் இருக்கும்.
- அதிக நேரம் நீடிக்கக்கூடிய மின்கலன்கள் பயன்படுத்தப்படும்.
- இதன்வழி ஓரடுக்குப் பேருந்துகளை 310 கிலோமீட்டர் வரை இயக்கலாம்.
- ஈரடுக்குப் பேருந்துகளை 240 கிலோமீட்டர் வரை இயக்கலாம்.
பயணிகள், ஓட்டுநர்கள், பேருந்து நிறுவனங்களின் கருத்தை வைத்து புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்படுவதாக ஆணையம் சொன்னது.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments