Ticker

6/recent/ticker-posts

சிம்பன்சிக்கு ஆளில்லா வானூர்திகள் மூலம் உணவு விநியோகம்!


சிம்பன்சிக்கு (chimpanzee) உணவு...

ஆளில்லா வானுர்தியின் உதவியுடன் கொடுக்கப்பட்டது!

அமெரிக்காவின் புளோரிடா (Florida) மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டதால் அங்குள்ள Save The Chimps சிம்பன்சி காப்பகம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

சாலைகள் வெள்ள நீரில் மூழ்கிவிட்டன. சிம்பன்சிகளை அடைய வேறு வழியில்லாமல் ஆளில்லா வானூர்திகள் அனுப்பப்பட்டன.

அதைக் காட்டும் காணொளியைக் காப்பகம் அதன் Facebook பக்கத்தில் வெளியிட்டது.

காணொளியில் கேலப் (Kaleb) எனும் 38 வயது சிம்பன்சி உணவு பெறுவது தெரிந்தது.

வானூர்தி கேலப் இருக்கும் இடத்துக்குச் சென்று உணவு நிறைந்த பையைக் கீழே போட்டது. அந்தப் பையைக் கேலப் எடுத்துக்கொண்டது.

காணொளி இணையத்தில் பரவுகிறது.

இணையவாசிகள் பெரும்பாலானோர் சிம்பன்சிகளைப் பாதுகாக்கும் காப்பகத்தின் முயற்சிகளைப் பாராட்டினர்.

காப்பகத்துக்கு நன்கொடை வழங்கப்போவதாக அல்லது வழங்கிவிட்டதாகப் பலர் குறிப்பிட்டனர்.

சிரமமான சூழ்நிலையிலும் காப்பகம் தொடர்ந்து செயல்படுவதை இணையவாசிகள் மெச்சினர்.

seithi


 


Post a Comment

0 Comments