பச்சைத் தேயிலையின் சிறப்புக்கள், (GREEN TEA)-கட்டுரை

பச்சைத் தேயிலையின் சிறப்புக்கள், (GREEN TEA)-கட்டுரை

உலகம் முழுவதிலும் மூன்றுவகைத் தேயிலைகள் பயன்படுத்தப்படுகின்றது. தேயிலை பக்குவப்படுத்தும் முறையை அடிப்படையாகக் கொண்டே இந்த மூன்று வகைத் தேயிலையும் உருவாக்கப்படுகின்றது. கறுப்புத் தேயிலை,  ஊலோங் (Oolong) தேயிலை, பச்சைத் தேயிலை என்பன அந்த மூன்று வகைத் தேயிலைகளாகும்.

பொதுவாகத் தேயிலையைப் பக்குவப்படுத்த பறித்த தேயிலை இலையைக் காயவைப்பதற்கு முன்பு அதனை பெர்மெண்டேசன் (Fermentation) செய்வார்கள் இதன்போது தேயிலையின் நிறம் கறுப்பாக மாறுபடும். சாதாரணமாக நாம் பாவிக்கின்ற கறுப்புத் தேயிலை இந்த முறையில் பதப்படுத்தப்பட்டே தயாரிக்கப்படுகின்றது.

ஊலோங் (Oolong)தேயிலை குறைந்த நேரமே பெர்மெண்டேசன் செய்யப்படுவதால் அது சிவப்பு நிறமான தேனீரை நமக்குத் தருகின்றது.
  
ஆனால் பச்சைத் தேயிலை பெர்மன்டேசன் செய்யப்படாமலேயே காயவைக்கப்படுகின்றது.  இதனாளல் தேயிலையின் இயற்கையான தன்மை- நிறம் என்பன பாதுகாக்கப்படுவதோடு- இதனுடைய ருசியும்- மணமும் இதனால் கெடாமலிருக்கின்றது. கறுப்புத் தேயிலையானது முற்று முழுதாக பெர்மன்டேசன் செய்யப்படுவதால் அதன் பசுமைத் தன்மையும் நிறமும் மாற்றமடைகின்றது.

கொரோனா (Covid-19) நுண்ணுயிர் தொற்றுக்காலத்தில் வாழ்கின்ற நாம், என்டிஒக்சிடன்ட் (Anti Oxigen) பற்றிப் பரவலாகப் பேசப்படுவதை அறிகின்றோம்!

நம் உடலிலுள்ள திசுக்கள் பல்வேறு காரணங்களால் பாதிப்படைகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த நம் உடலினுள்ளேயே என்டிஒக்ஸிடன்ட் உருவாகின்றது. ஆனால் சில சூழ்நிலைகள் காரணமாக நம் உடம்பில் உற்பத்தியாகும் என்டிஒக்ஸிடன்ட் நம் உடம்பிற்குப் போதாமற் போய்விடுகின்றது. ஆனால் நாம் உண்ணும் உணவில் இயற்கையாக உள்ள விட்டமின் - ஈ சி- ( (vitamins E and C, and the nutrient beta-carotene)  ) என்பன என்டிஓக்ஸிடன்டின் பணியைச் செய்கின்றன. அதனால்தான் நாம் ஆரோக்கியமாக வாழ அன்டிஒக்ஸிடன்ட் உள்ள உணவு நமது உடம்பிற்கு தேவைப்படுகின்றது.

கென்ஸாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சிகளின்படி பச்சைத் தேயிலையானது நமது திசுக்களைப் பாதுகாக்க   விட்டமின் -E யைவிட 100 மடங்கும், விட்டமின் C யைவிட 25வீதமும் அதிக சக்தியை நமக்குத் தருவதாக அறிய முடிகின்றது. அது தவிர பச்சைத் தேயிலையானது இருதய நோயிலிருந்து பாதுகாப்பையும்- பற்களில் ஈறுகள் உருவாகாதிருப்பதிலும்- நமது ஜீரணத்திற்கும் உறுதுணை புரிவதோடு-  புற்றுநோயிலிருந்தும் நமது திசுக்களைப் பாதுகாக்கத் துணைபுரிகின்றது.

பச்சைத் தேயிலையிலுள்ள என்டிஒக்ஸிடன்ட் வாய்- இரைப்பை- கணையம்- நுரையீரல்- குடல்- தொண்டை மற்றும் மார்புப் புற்றுநோயிலிருந்து மனிதனைப் பாதுகாப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஹார்வேட் பல்கலைக் கழக ஆராய்ச்சிகளின்படி தேனீர் அருந்துபவர்கள் தேனீர் அருந்தாதவர்களை விட 40 வீதம் குறைவாகவே மாரடைப்பு நோயால் பாதிக்கப்படுவதாக அறியக் கிடைக்கின்றது. பச்சைத் தேயிலையிலுள்ள புளோரைட்டானது பற்சிதைவை ஏற்படுத்தும் பக்டீரியாவிலிருந்து மனிதனைப் பாதுகாக்கவல்லது. எலும்பு வளர்ச்சிக்கு அவசியளமான  மேங்கனீஸூம் இருதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தும் பொட்டாசியமும் பச்சைத் தேயிலையில் அபரிதமாகக் காணப்படுகின்றது.

பச்சைத் தேயிலையில் B-1, B-2, B-3 போன்ற விட்டமின்களும்,  போலிக் அமிலம், கல்சியம் (Vitamin B1,B2,B3,Folic Acid ,  Calcium)  போன்றனவும் அடங்கியுள்ளன.  புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு- கொலொஸ்ட்ரோலைக் கட்டுப்படுத்தல்- இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுத்தல்- இதயத் துடிப்பைப் பாதுகாத்தல்- உணவைக் கேடுபண்ணும் பக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தல்- அலர்ஜியிலிருந்து பாதுகாப்பு போன்ற இன்னோரன்ன செயற்பாடுகள் பச்சைத் தேயிலை பருகுவதன் மூலம் ஏற்படுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இதனால் பச்சைத் தேயிலையின் மகத்துவம் இன்று உலகம் முழுவதிலும் உணரப்படுகின்றது.

கரும்பச்சையான இந்தத் தேயிலை சுருண்டு நீளமாகக் காணப்படும். நீரில் போட்டவுடன் விரிந்து இதன் நிறம் சாதாரண பச்சையாக மாறும். பல நாடுகளில் பச்சைத் தேயிலை தயாரிக்கப்பட்டாலும் சீன நாட்டின் பச்சைத் தேயிலையே தரம்மிக்கதாகக் கருதப்படுகின்றது.

மற்றத் தேயிலையைத் தயாரிப்பதற்குப் போன்று நீரை அதிகம் கொதிக்க வைக்கத் தேவையில்லை. கொதித்து இரண்டு நிமிடங்கள் ஆறிய நீரை உபயோகித்துப் பச்சைத் தேனீரைத் தயாரிக்கலாம்.
முதலில் ஒரு குவளையில் பச்சைத் தேயிலை சிறிதளவைப் போட்டு- கொதித்து இரண்டு நிமிடங்கள் ஆறிய நீரை தேயிலைத்தூளை மூடும் அளவிற்கு ஊற்றி- அந்த நீரை வீசிவிடுவதன் மூலம்  தேயிலை கழுவப்படுவது மட்டுமன்றி  அதிலுள்ள காஃபீனும் ஓரளவு அகற்றப்படும். அதன் பிறகு தேவையான அளவு வெந்நீரை ஊற்றி- இரண்டு நிமிடங்கள் ஊறவைத்து அருந்தலாம்.

பச்சைத் தேனீருக்கு சர்க்கரையோ- பாலோ சேர்ப்பதில்லை. சுவைக்காக தோலுடன் நறுக்கிய எலுமிச்சம் பழத்தில் சிறிதளவு தேனீரில் விட்டு அருந்தலாம். மணம்- சுவை- மருத்துவக் குணமுடைய பச்சைத் தேனீர் அருந்துவதன் மூலம் நமது தேகாரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.  

கொரோனா தொற்றுக் காலத்தில் வாழ்கின்ற நாம், சூடாக “பச்சைத் தேநீர்” (Green Tea) அருந்துவது நமது இதயத்தின் சீரியக்கத்திற்கு சாலச் சிறந்ததாகக் கருத முடியும் என்பதை "வேட்டை" மூலம் ஆலோசனையாகக் கூறிக்கொள்வதில் பெருமிதமடைகின்றோம்!

Post a Comment

Previous Post Next Post