Ticker

6/recent/ticker-posts

இதுதான்யா ஜப்பானு.. கால்பந்து மேட்ச் முடிஞ்சதும் ஸ்டேடியத்தை சுத்தம் செய்த ஜப்பான் ரசிகர்கள்.. குவியும் பாராட்டுகள்..


பொது சுகாதாரத்திற்கு எப்போதும் முக்கியத்துவம் அளிக்கும் ஜப்பானியர்கள், உலகக் கோப்பை கால்பந்து மைதானத்திலும் அதை கடைபிடித்த நிகழ்வை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில், ஜப்பான் அணி தனது முதல் போட்டியில் ஜெர்மனியை 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. உலக சாம்பியனான ஜெர்மெனியை ஜப்பான் அணி வீழ்த்தியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மிக பிரமாண்டமான இந்த வெற்றியை மைதானத்தில் இருந்த ஜப்பான் ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஜப்பானில் போட்டியை பார்த்து கொண்டிருந்தவர்களும் கொண்டாடி தீர்த்தனர்.

மேலும், அரங்கில் இருந்த ஜப்பான் ரசிகர்கள் தூக்கி வீசப்பட்டு பாட்டில்களை சேகரித்து, தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
news18


 


Post a Comment

0 Comments