பாஜக-வை வீழ்த்த ஒவ்வொருவரும் ஒருங்கிணைவது அவசியம் என்று மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லி சென்றுள்ள மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இதேபோல, காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஆனந்த் சர்மா, கமல்நாத் ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை அவரது இல்லத்தில் புதன்கிழமை மாலை சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியும் உடனிருந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, தங்களது சந்திப்பு சிறப்பாக இருந்ததாகக் கூறினார். அரசியல் சூழல் குறித்தும், பெகாசஸ், கொரோனா நிலவரம், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை ஆகிய விவகாரங்கள் குறித்தும் விவாதித்ததாக அவர் தெரிவித்தார்.



0 Comments