Ticker

6/recent/ticker-posts

வேட்டை இதழ் 5 ஆண்டு நிறைவு வாழ்த்துப்பா!

   மதுரை பாபாராஜ்    
வேட்டை இதழுக்கு அகவை 5/6
வேட்டை இதழோ இலக்கியத் தொண்டிலே
போற்றும் சாதனை ஆண்டுகள் ஐந்தினை
ஆக்கபூர்வ மாகத்தான்  இங்கே  நிறைவுசெய்து 
ஆறாவ தாண்டில் நிமிர்ந்து நடைபோட
காண்கிறேன்! காணட்டும் நூறு.

பன்னாட்டு வாசகர்கள் ஆதரவில் வேட்டையில்
பன்முக ஆற்றல் அறிமுக மாகின்றார்!
இந்த உலகத்தைக் கையளவில் கொண்டுவரும்
தொண்டுகள் வாழ்கபல் லாண்டு.

ஆசிரியர் மற்றும் குழுவினர் சேர்ந்தேதான்
ஆர்வமுடன் நாளும் குழுஉணர்வால்
ஒன்றிணைந்து
நேர்மையாய்ப் பாடுபடும் பண்பினை வாழ்த்துகிறேன்!
வாழ்கபல் லாண்டு தொடர்ந்து.

=============================

மதுரை பாபாராஜ் பற்றிய குறிப்புகள்

பெயர்:சு.பெ.பாபாராஜ் (மதுரை பாபாராஜ்)
தந்தை :தெய்வத்திரு.சு.பெருமாள் முதுசுப்பு
தாய்:தெய்வத்திரு.தேவகி முத்துசுப்பு
பிறந்தநாள்:11.10.1948
மனைவி:பா.வசந்தா
பள்ளிகள்:கேப்ரன் ஹால்—மதுரை
புனித ஜோசப் கான்வெண்ட்—மதுரை
சேதுபதி உயர்நிலைப் பள்ளி—மதுரை

கல்லூரிகள்:மதுரைக் கல்லூரி மதுரை
அழகப்பா கலைக் கல்லூரி கரைக்குடி

பட்டம்:அறிவியல் இளவல்-பயிரியல்

பணிபுரிந்தநிறுவனங்கள் :
பென்னெர் (இந்தியா) லிட் மதுரை (22 ஆண்டுகள்)
பி எம் எஃப் பெல்டிங்க்ஸ் லிட் சென்னை (10 ஆண்டுகள்)

பொறுப்பு:
முதுநிலை அலுவலர்(ஓய்வு)
இல்லமுகவரி :திருவேரகம்
 34/10,தலைமைச் செயலகக் குடியிருப்பு
 நகர எல்லைச்சாலை
 ஆதம்பாக்கம் ,  சென்னை 600 088
தொலைப்பேசி :044 22447661
கைபேசி எண் :900 3260 981
மின்னஞ்சல் :spbabaraj@gmail.com

இணையதளம்:www.maduraibabaraj.blogspot.com
மொழிபெயர்ப்புப் பணி:ஆங்கிலம் - தமிழ்; தமிழ் - ஆங்கிலம்

ஊக்கச் சிறகுகள்
1.பாரதியார் நூற்றாண்டு விழா.1982புதுவை அரசு விழா 
2.திருச்சி வானொலி நிலையம்.08.07.1986 கவிமுகில் நிகழ்ச்சி
3.பாரதிதாசன் நூற்றாண்டு விழா.1991தமிழ்நாடு அரசு விழா (100 கவிஞர்கள் பங்கேற்பு)
4.அமரர் ராஜீவ் காந்தி கவிதைப்போட்டி.மே1993 மதுரை மாவட்டம் முதல் பரிசு
5.மதுரை வானொலி நிலையம்.18.08.1994 சரவிளக்கு
6.சென்னை வானொலி நிலையம்சினிமா நேரம் சிறப்பு விருந்தினர்
7.பொதிகை தொலைக்காட்சி.26.09.2003 பேச்சுக் கச்சேரி
8.பொதிகை தொலைக்காட்சி.13.09.2005 முத்தமிழ் மன்றம்
9.பொதிகை தொலைக்காட்சி.16.02.2007கவிதைபாடு குயிலே
10.  வெளிச்சம் தொலைக்காட்சி.வள்ளுவன்வாக்கு

கவிஞரின் நூல்கள் இதுவரை:
 
கவிச்சாரல்-1981
கவியமுதம்-1984
மகர விளக்கு-1985
மரபுகளின் அருவி-1989
மகிழம்பூ-1997
கிளிஞ்சல்கள்-2002
மகரயாழ்-2004
அற்புதத்தரு(சீரடி சாய்பாபா அற்புதங்கள் கவிதை வடிவில்)-2005
திருக்குறள் பேழை-2006
திருக்குறள் (1330) (வெண்பா வடிவில்)-2008
வசந்தம்-2010
பூச்சரம் (அகரவரிசைக் கவிதைகள்)-2012
தேனருவி-2014
வாழ்வியல் அந்தாதி-2015
கம்பராமாயணம் அயோத்தி முதல் கிட்கிந்தை வரை-2015
Thirukkural-araththuppal-english-2018                                                               
Thirukkural inbaththuppal-english-2018    
                                                                             
குறுந்தகட்டில் உள்ள படைப்புகள்
மின்னூல்கள்:

திருக்குறள் குழந்தைப்பாடல்--அறம்,பொருள் இன்பத்துப்பால் குழந்தைகளுக்காக
கம்பராமாயணம் குறள் வெண்பா
மனக்குறள்
திருக்குறள்--ஆங்கில விளக்கம்_-பொருள்
பாரதியின் புதிய ஆத்திச்சூடி

KINDLE EDITION:

1 சிலம்புக்குறள்
2 மனக்குறள்
3 REVERBERATION
4 கவிதைக்களஞ்சியம் 1
5 கவிதைக்களஞ்சியம் 2
6 கவிதைக்களஞ்சியம் 3
7 கவிதைக்களஞ்சியம் 4
8 மதுரை பாபாராஜ் கவிதைகள்
9 அறத்துப்பால் குழந்தைகளுக்காக
10 கவிதைத் துளிகள்
கவிதை விளக்கம்:
11. ஔவையார் ஆத்திசூடி
12. பாரதி புதிய ஆத்திசூடி
13. Valluvan vakku
வெளிச்சம் தொலைக்காட்சி
ENGLISH TRANSLATION:
14.Attitudes of love( இன்பத்துப்பால்)
Chanrorthalam e book
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து:
15..அறத்துப்பால்
16.பொருட்பால்
ENGLISH TRANSLATION:not yet published
17.VIRTUE ENGLISH VERSION
(அறத்துப்பால்)
18. பொருட்பால் குழந்தைகளுக்காக






Post a Comment

1 Comments