Ticker

6/recent/ticker-posts

வாழ்க பல்லாண்டு ...!! (வேட்டைக்கு வாழ்த்து)


முன்பொரு நாள் 
ஒரு கைக்குழந்தையாக உன்னைப் 
பார்த்த ஞாபகம் ...
அதற்கிடையில் ஆறு வயதை 
பூர்த்தி செய்துவிட்டாயா நீ...?!

உன் வயதை விட 
அனுபவத்தில் நீ பெரியவன் என்பதை 
நீ சுமந்து வரும் ஆக்கங்கள் 
சொல்லிவிட்டுச் செல்கின்றன ...

சிரிக்க வைக்கிறாய் 
சிந்திக்கத் தூண்டுகிறாய் 
கதை சொல்கிறாய் 
கவிதைமழை பொழிகிறாய் 
அரசியல் பேசுகிறாய் 
ஆத்மீகமும் பேசுகிறாய்...

உன்னோடு கைகோர்த்து நடப்பதில் 
எனக்கும் பெருமிதம்தான் ...
நாளையும் பயணிப்பேன் 
உன்னோடு சேர்ந்து ...!
வாழ்க பல்லாண்டு ...!!

Post a Comment

0 Comments