Ticker

6/recent/ticker-posts

"தியாகச் சுடர்"(1969)-விரைவில்!

மலையகத்தின் தமிழகம் என சான்றோர் போற்றிய கல்ஹின்னையின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரும், செந்தமிழ் இலக்கியத்திலும் சர்வதேச மொழியாம் ஆங்கில இலக்கியத்திலும் ஆக்கங்கள் பல தந்தவருமான இரு மொழி வித்தகர். தான் பிறந்த ஊரின் பெயரை உலகம் உச்சரிக்கச் செய்தவர். வானொலிகளிலும், மேடைக் கவியரங்குகளிலும் கவிதை மழை பொழிந்தவர். 

கல்லூட்டுக் கவிராயராய் கவிதைத் துறையில் ஆரம்பித்த பயணம் கவியரசாய், கலாபூஷணமாய், ரத்னதீபமாய், அருட்கவியாய் இன்னும் பல கௌரவ விருதுகளையும் பட்டங்களையும் குவித்தார். அவர் தான் மர்ஹும் கல்ஹின்னை எம்.எச்.எம். ஹலீம்தீன் அவர்கள் . 

தனது கன்னி முயற்சியாக தியாகச் செம்மல் ஹுஸைன் (ரலி) அவர்களது சரிதையை 1969 ஆம்  ஆண்டு "தியாகச் சுடர்" என்ற பெயரில் காவியக் கவிதை நூலாக வெளியிட்டார். 

கவிஞரது அன்புக்குரிய மைத்துனர்  கவிமணி மர்ஹும் எம்.ஸி.எம்.ஸுபைர் அவர்களது மணிக்குரல் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டது.

மீண்டும் இந்நூலை கல்ஹின்னை "தமிழ் மன்றம் "  மீள் பதிப்பு செய்யத் திட்டமிட்டுள்ளதையும் மகிழ்வுடன் அறியத் தருவதோடு  "தியாகச் சுடர்" கவிதை நூலை "வேட்டை" சஞ்சிகையில்விரைவில் வாசர்களுக்கும் விருந்தாக்குகிறோம்.  

Post a Comment

0 Comments