Ticker

6/recent/ticker-posts

ஜமீயத்துல் உலமாவின் zoom திருட்டு சமூகம் கற்றுக் கொள்ளவேண்டிய பாடம் என்ன !

அண்மையில் ஜமியத்துல் உலமாவினால் நடத்தப்பட்ட  zoom meeting 
ஒளிப்பதிவு மாற்று மதகுரு ஒருவரினால்  meadia மூலம் வெளிப்படுத்தப்பட்டது. 

இச்சம்பவம் முஸ்லிம் சமூகத்திற்கு  ஒரு தலைகுனிவை ஏற்படுத்தியது.

நமக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். அவை நமக்குள் தீர்க்கப்பட வேண்டும். 

யார் செய்தாலும்  இது மிகவும் கீழ்தரமான நாகரிகரீகமற்ற  ஒரு செயலாகும்.

உண்மையில் ஐவேளையும் அல்லாஹ்வுக்காக பூமியில் தலையை வைக்கக்கூடிய, ஒரு உண்மையான முஸ்லிம்,  சமூகத்தில் அணுவளவேனும்  கரிசனை இருக்கக்கூடிய ஒரு முஸ்லிம், இவ்வாறான வேலைகளில்  ஈடுபட மாட்டான் என்பதே உண்மை.

அந்த மத குரு அதை பூதாகரமாக வெளியிடும் அளவிற்கு அதில் ஏதுமில்லை. என்றாலும் நம்முடைய கூறுகெட்ட வேலையால் நம்மிடம் தடியை வாங்கி நம்மையே வெழுக்கின்றார்.  இவரது நோக்கம் நமக்குள் ஒரு சண்டையை மூட்டிடுவதை தவிர வேறில்லை.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு  அலைஹிவஸல்லம்  அவர்கள் எதிரிக்கு பயப்படவில்லை.  மாறாக  முனாபிக்களுக்குகே  பயந்தார்கள்.

நடக்கக் கூடாதது நடந்து முடிந்துவிட்டது. இனி இதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன ?


1தாங்களுக்கு மிகவும் விசுவாசமான ஒரு குழுவை தெரிவு செய்து இவ்வாறான ஒரு சந்திப்பு நடைபெற்றதை,  நம்மில் குறி வைத்திருக்கும் ஒருவரிடம் சென்றது எவ்வளவு பாரதூரமான செயல் என்பதை முதலில் சிந்திக்க வேண்டும்.

நம்மில் எவ்வளவு பெரிய ஓட்டை இருக்கின்றது. என்பதை நிரூபிக்க இதுவே போதுமானது.   ஜம்மீயத்துல் உலமா சம்பந்தமாக  இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கு  இவர்களின் செயல்களில் பலவற்றில்  உடன்பாடில்லை.  அது உண்மை. ஆனால் அது
நமக்குள் பேசப்பட வேண்டியவை நமக்குள் தீர்கப்பட வேண்டியவை. 

முஸ்லிம் சமூகம், இன்று எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம்,  சில சுயநலவாதிகளால்  செய்யப்பட்ட இதுபோன்ற செயல்களே.  இன்றைய பிரச்சினைக்கு முதற் காரணம் இதுவேயாகும்.

சில வருடங்களுக்கு முன் நம்மில் உள்ளவர்களே  ஒருவரை யொருவர் எதிரிகலாவும், பயங்கரவாதிகளாகவும், முற்போக்கு வாதிகளாகவும் , மற்றவர் மத்தியில் ஒருவருக்கொருவர்  குறை சொல்லி திரிந்ததன் விழைவாகவே இன்று  இதன் பிரதிபலிப்பை நாம் அனைவரும் சேர்ந்து அனுபவிக்கின்றோம்.

உதாரணமாக மிக அண்மையில் சென்ற வாரம்,   இரத்தினபுரி யைச் சேர்ந்த என்ற  ஒரு மேலான உலமா, பிர்கதுல் உலமா என தன்னை அறிமுகப்படுதிக் கொள்பவர் , தனது மார்க்க ரீதியிலான ஒரு கருத்திற்கு, மாறான கருத்தை வெளியிட்ட , சில உலமாக்களுக்கு, மார்க்க ரீதியிலான எதிர் கருத்துக்களை வெளியிடாமல், அவர்களுக்கு எதிராக, வேறு விதமான வகையில் குற்றச்சாட்டுக்களையும், அப்பாண்டங்களையும்,  சிங்கள மொழி மூலம் வெளியிட்டதை நாம் கண்டோம்.

நிச்சயமாக இவர் ஒரு உலமாவாக இருந்தால் இவ்வேலையை செய்திருக்க மாட்டார். அவரின் செயலுக்கும் இந்த மத குருவின் செயலுக்கும்  இடையில் எந்த வித்தியாசமுமில்லை.

ஆனால் அது சம்பந்தமாக எந்தத் தரப்பும், எந்தத் தலைமையும், அவரை எச்சரிக்கவோ, அது சம்பந்தமாக கருத்துக்களை வெளியிடவோ  இல்லை. அவர் சொன்ன கதைகள். பாரதூரமான ஒளிப்பதிவுகள். சந்தர்பத்தை பயண்படுத்தும், சந்தர்பவாதிகளுக்ககு இவை போன்றவைகள் கிடைத்தால் நம் தலையிலேயே அத்தனை பொழுதும் விடியும்.    கண்டுகொள்ளவில்லை. 

கடந்த காலங்களில் ஒரு தூரோகி, சமூகத்திற்கும் நாட்டிற்கும்  செய்த அநியாயத்தினால் அப்பாவிகளாக கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்ட, சில சகோதர உலமாக்களின் குடும்பங்கள், பெண்கள், கைக் குழந்தைகளுடன் சிறை வாசல்களில் வடித்த கண்ணீரையும், அந்த சகோதரிகளை சிறை அதிகாரிகள் நடாத்திய விதத்தையும்,  சம்பந்தமில்லாமல் அப்பாவிகளாக  சிறையில் அடைக்கப்பட்ட  சில உலமாக்களினதும், சில சகோதரர்களினதும்  விடுதலை  நடவடிக்கைகளுக்கா  சென்று இருந்தபோது இவற்றை  என் இரு மாணிக்கங்களால் நான் கண்டேன்.

தலை வலியையும்   தண்டனையையும் தான் அனுபவித்தால் தான் தெரியும்.

இது போன்ற ஒரு இருண்ட காலம் நம் சமூகத்திற்கு ஏற்படக் கூடாது என்பதே எனது பிராத்தனை. இச்சம்பவத்தின்  பின்பாவது இவற்றிலிருந்தாவது  நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

எனவே இவ்வாறான கீழ்த்தரமான செயல்களை செய்வதில் இருந்து இதன் பிறகாவது  நம் சமூகம் பாடம் படிக்க வேண்டும்.

யார் இவ்வாறான, வெட்கக்கேடான,  நாகரிகமற்ற, வேலையை செய்தார்களோ, இதேவேலை    நாளை அவர்களுக்கே வினையாக அமையலாம் என்பதை  அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

நம்மை குறிவைக்கும் போது
தப்லீக்கா,  தவ்ஹீதா,  தரீக்காவாதியா  என்பதை பார்க்க மாட்டான்.  எதிரியின் கையில் கிடைப்ப தெல்லாம் ஏரிகனைகள்தான். என்றோ ஒரு நாள் அதை கொண்டு நமக்கே எறிவான் என்பதை மறந்து விடக்கூடாது.

2.  இந்த சந்திப்பின்போது பேசப்பட்டது என்ன ?

அதாவது நம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள்.  எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள்.  சமகாலத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள். முன்னேற்றங்கள்  போன்றவையே ஆராயப்பட்டது.  நாம் இந்த நாட்டில் ஒரு  சமூகம் என்ற வகையில் இது பற்றி ஆராயவும், சிந்திக்கவும், கூட்டங்கள் நடத்தவும் நமக்கு  பூரண சுதந்திரமும் உரிமையும் உண்டு.

மேலும் இதில் நாட்டுக்கு விரோதமாகவோ இந்த சமூகத்துக்கு விரோதமாகவுனவோ  ஒரு தனிநபருக்கு விரோதமாகவோ எந்த விடயங்களும் ஆராயப்பவே பேசப்படவே இல்லை.

ஆக  குறிப்பிட்ட   நமது சமூக விடையத்தை  ஒற்றுக் கேட்டு, பகிரங்கப்படுத்தியது ஒரு நாகரீகமற்ற, இழிவான  செயலாகும்.  இது அடுத்த மனிதனின் வீட்டை எட்டிப்பார்ப்பது போன்ற மிகவும் அருவருப்பான ஒரு செயலாகும். ஒரு மார்க்க  போதகர் ஒருவர் இவ்வாறான செயலில் ஈடுபட்டிருக்கக்கூடாது. அவர் அவ்வாறான செயலில் ஈடுபடுவது அந்த அந்த மதத்திற்கே ஒரு  அவப் பெயராகும். 

இவரின் அறுவருக்கத்தக்க  செயலை அந்த மக்களின் சுட்டிக்காட்டி இச்செயலை நம் சமூகத்துக்கு சாதமா பயன்படுத்தும் அளவுக்கு  இந்த அமைப்பில் கைதேர்ந்தவர்கள் இல்லாதிருப்பது நமது துரதிஷ்டவசமாகும். 

திறமை உள்ளவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கி  முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க தடையாய்  இருக்கும்  தலைமைகள் இதன் பிறகாக சிந்திக்கட்டும். 

3.  இறுதியாக நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய ஒரு உண்மை இருக்கின்றது.  இது சிலரு‌க்கு சுற்று கசப்பே, ஆனாலும் செமித்தே ஆகவேண்டும்.

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில், இவ்வாறான செயல்களை கண்டிக்கவோ இவ்வாறான  செயல்களுக்கு நடவடிக்கை எடுக்கவோ,  இவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவோ   நம்மிடத்தில்  தைரியமாக, இதை எடுத்து  பேசக்கூடியவர்கள் இல்லை என்பது அவர்கள் அறிந்த உண்மை.

நமது அரசியல் தலைமைகளை  பொருத்தவரை இன்று தமிழ் சமூகத்தின் அரசியல் தலைமைகளுடன் ஒப்பு நோக்கும் போது  வானமும் பூமியுமாக  காணப்படுகின்றனர். 

இவற்றை தைரியமாக எடுத்து பேச நமது அரசியல் தலைமைகளின்  கை சுத்தமானதாக இல்லை.  அரசியல் தலைமைகளை பொருத்தவரை   ஊழலும்  பதவிக்காகவும்  பணத்திற்காகவும்  சமூகத்தை  சமூக உரிமை விற்பனையாளர்களக
காணப்படுகின்றனர். 

கடந்த காலங்களில்  இவர்கள் இனவாதம் பேசி முஸ்லிம் வாக்குகளை பெற்று  பாராளுமன்றம் சென்று முஸ்லிம் சமூகத்தின் கன்னத்தில் அறைந்த தையும் , அறைந்தவர்களுக்கு தலைமைகள் மன்னிப்பு வழங்கிய  வினோத வித்தைகளையும்,  இன்று அவர்கள் ஐயா சரணம்  என  தன்மானத்தை இழந்து ஆட்சியாளர்களின் கீழ்   வீழ்ந்து கிடப்பதையும்  கண்கூடாகக் காண்கின்றோம். 

இந்தத் துரோகிகளின் துரோக அரசியல், முஸ்லிம் சமுகத்தில் நிலைக்கும் வரை, முஸ்லிம் சமூகம் இதை சிந்தித்து விளங்கும் வரை,  இந்த சமூகம் இவ்வாறன சோதனைகளை அனுபவிக்கத்தான் வேண்டும். 

அடுத்தது ஆன்மீக தலைமைகளை பொருத்தவரை,  அரசியலுக்காகவும், அரசியல்வாதிகளின் அன்பைப் பெறவும்,  கடந்த காலங்களில்  அரசியல்வாதிகளை புகழ, பள்ளிவாசல் மிம்பர் மேடைகளை  பயன்படுத்தி எதையும், அரசியலுக்காகவும், அரசியல்வாதிகளை திருதிப்படுத்தவும்,  தனது சகோதரனின் ஜனாசாவைகூட எரிக்க  அனுமதி வழங்கியதையும், அரசியலுக்காக  இவ்வாறான,  சமூகம் மன்னிக்க முடியாத பெரும் பாவங்களை,  மனம் அறிந்த நிலையில் மனமுறன்டாக செய்ய கூடியவர்களையும் நாம் கண்டோம். இது இஸ்லாமிய ஆன்மீக தலைமைத்துவம்.

மறு புறம் இவர்களிடத்தில்  உள்ள கோடான கோடி சொத்துக்களும், பணமும், இவர்களை சமூகத்துக்காக வாய்திறப்பதை விட்டும் தடுக்கின்றது.  தான் சமூகத்திற்காக வாய் திறந்தால்,  இத்தனை கோடான கோடி சொத்துக்களுக்கும் முதலீடுகளுக்கும் கணக்குச் சொல்ல வேண்டி வரும் என்ற  வகுன் என்ற உலக ஆசை இவர்களை ஆட்கொண்டுவிட்டது.

இன்று நியாயத்திற்காக போராடும் கிறிஸ்துவ மத  தலைமைகளிடம்  இருந்தாவது இவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

கடந்தகால அசம்பாவித்தில், கிறிஸ்தவ மக்களுக்கு ஏற்பட்ட  உயிரிழப்புகள் மத ஸ்தானங்களுக்கான  சேதங்கள் போன்ற ஒரு  அவப்பெயரும்  கரை படிந்த வரலாறும் நம்மில் சிதைக்கப்பட்டது. 

ஆனால்  அவர்களின் நியாயத்துக்காக அவர்கள் போராடும் அதேவேளை எம் சமூகத்திற்கு ஏற்பட்ட இருண்ட வரலாற்றிற்கு நியாயம் கேட்பதற்காக எவருமில்லை.

இன்று முஸ்லிம்  சமூகத்திற்கு  ஏற்பட்டிருக்கும் ஒரு கவலையான தலைவிதி, இவைகளை எடுத்துக் கூறவும்,  குறைந்தபட்சம்  தைரியமாக   meadia முன் பேசக்கூட,  ஒரு meadia conference நடாத்தக் கூட ஆளில்லாத
கேவலமான  நாதியற்ற நிலை.

முஸ்லிம்களுக்கு அநியாயத்துக்கு மேல் அநியாயம் நடந்தும்,  நாம் வணங்கும்  வல்ல இறைவனை  கொச்சைப்படுத்தியும்,  நம் சமூகத்தில் நடக்கின்ற இன்று சந்திப்புக்களை வெளிப்படுத்தி அநாகரிகமாக நடந்து கொள்பவர்களை, இவர்களின் அநாகரிகங்களை உலகத்துக்கு சொல்வதற்கு நாதியற்ற நிலை.

தன்னால் இவற்றை செயல்படுத்த முடியாது என்ன தெரிந்திருந்தும்  பதவி ஆசை, உலக மோகம்  என பேய்களாக  அலையும்   ஆன்மீகத்தின் நிலை.

இனி வரும் பிரச்சினைகளை நாலு லெப்பமாரினாலும் நாலு முஅத்தின்களாலும் சமாளிக்க முடியாது. இதற்காக படித்தவர்களையும் சட்ட வல்லுனர்களையும் சர்வதேசத்தின் பிரபலங்களுக்கும் சந்தர்பத்தை கொடுத்து வரும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க இதையாவது பாடமாக எடுத்துக் கொள்ளட்டும்.

இந்த முஸ்லிம் சமூகம் இன்னும்  எவ்வளவு காலம் இவ்வாறான தலைமைகளின் கீழ் வேதனைப்பட போகின்றது என்பது ஒரு கவலையான விடயமாகும்.


Post a Comment

0 Comments