
நிலையிலிருக்கும்தேர்
அவளைக் காணவரும் நாள்
ஊரில் தேர்த்திருவிழா.
இதுவரை எத்தனையோ
கதைகள் சொன்னேன்
அத்தனை கதைகளிலும்
நான் ராஜா நீ ராணி.
தேடும் முன்பு வந்துவிடு
உன்னை இழந்த வலி
மிச்சமாகட்டும் எனக்கு.
ஆகாயம் அழுது
பூமியை நனைத்தது
மழைக்குத் தெரியவே தெரியாது.
காதருகே
சொல்லவேண்டியதை
கூச்சலிட்டு
ஊரைக் கூட்டிச் சொல்லுகிறது
சூறைக்காற்று.
கடுமையாய் வீசும்
காற்றுக்குத் தெரியாது
நிறைய பனிச்சூரியன்கள்
சாகுமென்று...!
உச்சிக்கிளையில்
ஓரு பனித்துளி வெகுநேரமாய்
வம்புக்கிழுக்கிறது உதயனை.
வார்த்தையற்ற சொற்களில்
புதைந்திருக்கும்
அடர்த்தி நிரம்பிய மௌனம்.
பால்யத்தில்
விழுந்தெழுந்து ஓடிய வீதியில்
விழுந்துவிடக் கூடாதென்று
பார்த்துப் பார்த்து நடக்கிறேன்.
முதுமையில்.
மனம் வீசும்
திசையில் அசைகிறது
என் காதல்கொடி.
குளத்தில் மொத்தமாய்
சுழலும் மீன்கள்
வெள்ளிப்பொரிகளாய் மின்னின.
உன்னிதழ்
தரும் பரிசாய்
முத்தம் ஒன்றுபோதும்.
வேகமாய் வந்தமர்ந்த
பட்டாம்பூச்சியை ஒன்றும்
செய்யவில்லை ரேஜாமுள்.
பொங்கி வழிகிறது
கடல்.
எரியும் தீயைத் தணியுங்கள்.
நான் தொலைந்தாலும்
என்னில் தொடரும்
உந்தன் மீதான காதல்.


0 Comments