Ticker

6/recent/ticker-posts

மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-24 (வரலாறு-பாகம்-2)

தேகெதர அரசியல்  24
குடியிருப்பின் அரசியல் வரலாறு உள்ளுராட்சி  அரசியலிலிருந்து ஆரம்பமாகின்றது. அக்காலை தற்போதைய பிரதேச சபை அமைப்புக்குப் பதிலாக நாட்டில்  நிலவிய நிருவாக அமைப்பு கிராம சபை நிறுவனமாகும். பின்வருவோர் பாத்ததும்பர-பள்ளேகம்பஹ (வடக்கு) கிராமசபையில்  அங்கத்தவர்களாகப் பணிபுரிந்து பெருமை படைத்துள்ளனர்.

ஜனாப்கள் :
1. ஏ. எம். ஜலால்
2. எம். எம். ஹஸன்
3. அல்ஹாஜ் எம். எம். ஹலால்தீன்
4. ஏ. எம். அப்துல் ஹமீத்

பிரதேச சபை
1988ம் ஆண்டு அறிமுகமாகிய பிரதேச சபை அரசியல் நிருவாக அமைப்பில் வத்தேகெதரையைச் சேர்ந்த  அல்ஹாஜ் எம். எச். நஸீம்தீன் பாத்ததும்பர பிரதேச சபையில் அங்கத்தவராகவும் உபதலைவராகவும்  பதவி வகித்துள்ளார். ஜனாப் நஸீம்தீன் குடியிருப்பின் சமீபகால அரசியல், சமூக நடவடிக்கைகளில் பெரும் பங்கு கொண்டவராக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

வத்தேகெதரையில் முதலாவது :
ஆசிரியர்: ஜனாப் ஏ. எம். ஷேகு முஹிதீன் (முஹம்மது ஆசிரியர்)
ஆசிரியை: திருமதி நபீலா உம்மா ஸாஹிப்
அதிபர்: அல்ஹாஜ் ஏ. ஆh;. எம். முஹ்ஸின்
சமாதான நீதவான்:  ஜனாப் ஏ. எம். றியாழ்
கணக்காளா;: ஜனாப் ஏ. எல். அபூ உபைத்
சட்டத்தரணி: ஜனாப் ஏ. ஸி. எம். ஹாதிம்
மௌலவி: ஜனாப் எம். எச். எம். குத்புதீன் (ஆசிரிய ஆலோசகர்)
கைத்தியக் கலாநிதி: ஜனாப் எம். எம். மின்ஹாஜ்
கூட்டறவுப் பரிசோதகர்: ஜனாப் எம். அப்துல் வாஹித் (முன்னாள் தலைவர் - கண்டி பஸ் கம்பனி லிமிடட்;)
அறபுக் கல்லூரி உஸ்தாத்: ஹாபிழ் எம். எம்.  இஹ்ஸான்
ஹாபிழுள் குர் ஆன்: ஹாபிழ் எம். எம். முஜீப்
(தொடரும்)

Post a Comment

0 Comments