விளைநிலங்களின் நடுவே
விலைமதிப்பு மிக்கவை
என் வீடு
பால்கனியில் வைத்திருக்கும்
சிறுவாளி.,
தேங்கும் நீரை
பருகிட வரும்
குருவிகள் மற்றும் பறவைகளை
ரசிக்க தெரிந்த
நானே விரட்டிவிடுகிறேன்
தேடி வருவதை விட
திரும்பிச்செல்வதையே
அதிகம் விரும்புகிறேன்
குருவியினங்களின் சிணுங்கல்களை
அலைபேசியில் பதிந்து
அழைப்புமணியாகவே
வைத்திருக்கிறேன்
குளிரூட்டும் ஏசி அறை
வெளியேற்றும்
ரசாயன நீரிடமிருந்து
அவைகளை காப்பாற்றும்
ஒவ்வொரு முறையும்
படபடத்து போகும்
என் நெஞ்சம்.


0 Comments