கவிதை,கட்டுரை,சிறுகதை,சிறுவர் இலக்கியம் போன்றவற்றில் தடம்பதித்தவராவார்.1985-1987 காலப் பகுதிகளிலிருந்து இலங்கை வானொலி வர்த்தக சேவையுட்பட இலங்கை வானொலி சகல பண்பலைகளிலும் இவரது
ஆங்கங்கள் ஒலிபரப்பாகி வருகின்றன.அதனைத் தொடர்ந்து,
தேசிய பத்திரிகைகளிலும், இவரது படைப்புகள் உலாவரத் தொடங்கின. வீரகேசரி, எங்கள் தேசம்,விடிவெள்ளி மித்திரன,திகரன், தினக்குரல்,மெட்றோ,இருக்கிறம், வண்ண வானவில் போன்ற பத்திரிகைகள் சஞ்சிகைகளிலும், பிரசுரம் ஆகின.
முகம்மட் அமீர் மாஹிறா,முகம்மட் அமீர் கலீறா;மாஹிறா முஜீப்,கலீறா முஜீப்,ஹில்மா முஜீப்,மருதமுனை மாஹிறா,மருதமுனை ஹில்மா என்ற பல பெயர்களில் எழுதியவராவார். இவர் பல்துறைக் கலைஞர் மருதமுனை இ.லெ.முகம்மட் அமீர் என்பவரின் புதல்வியாவார். சமூக சேவைகளிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒருவராவார்.
விருதுகள்.
*2011ல் சாய்ந்தமருது லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் நிறுவனம் "கலைமுத்து"பட்டமளித்து கௌரவித்தது.
*2012ல் மலையக கலைகலாசார சங்கம் "இரத்தின தீபம்"விருதளித
ளித்து கௌரவித்தது.
2012ல் மலையக கலை கலாசார சங்கம் "உதய தாரகை"விருதளித்தது.
*2018ல் கலாசார அலுவல்கள் திணைக்களம் "கலைஞர் சுவதம்"விருது வழங்கியது.
*2019ல் மலையக கலை கலாசார சங்கம் "சமூக ஜோதி தேசாபிமானி" விருதளித்தது.
*2019ல் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு,கல்முனை பிரதேச செயலகத்தினால், "திறமையான பெண் ஒருவர் அழகான உலகைப்படைக்கிறாள்"என கௌரவித்தது.
கவியரங்குகள் பலவற்றிலும் கலந்து கொண்டு பாடி வருகிறார் மாஹிறா. "கவிதை கேளுங்கள்"முகநூல் பகுதியிலும் கவிதை பாடி வருகிறார்.
இவரது ஆற்றல்கள் சிறக்க வாழ்த்துவோமாக.
தகவல்:
சம்மாந்துறை மஷூறா


0 Comments