துருப்பிடித்த சிறை கம்பிகளுக்குள்
அடைபட்டிருக்கின்றன
நம் இதயங்கள்!
மூவேளை உணவிற்கும்
மருந்துவ நலனுக்கும்
வட்டிக்கும் வாடகைக்கும்
கசியும் வாழ்க்கை
ஒரு மாய சிறைச்சாலை;
ஆசைகளும் கனவுகளும்
அடைபட்டிருக்கும் சிறைகளுக்குள்
தற்கொலைகள் நடக்கின்றன;
அவற்றில் நிறைவேறும்
ஆசைகளாக
சில ஃபீனிக்ஸ் பறவைகள்!!
சிறைகள் தகர்த்து
மனச்சிறகை விரிக்க
நீ விடாமுயற்சியை திடமாக்கு,
உடைக்கப்பட்ட சிறைக்கம்பிகளை
நம் கனவுகளின் ஏணியாக்கு;
சிறகடித்து செல்வோம், வா!!!


0 Comments