Ticker

6/recent/ticker-posts

காலக் கொடுமை....!


வாழ்க்கை வனப்பின் சோலை அந்த
வாழ்க்கைக்குள் பலதும் பட்டாம் பூச்சியாய்
பறந்தே செல்கிறது பல திக்கும்
பலதும் பலதையும் வருடிச் செல்ல.

கொடுத்து வைத்த மனிதர் மட்டும்
அகிலத்தின் அனைத்தையும் முழுசாய் அனுபவிக்க
மற்றோர் எல்லாம் வாழ்வில் இடறி
வீழ்ந்து எழும்பி அழுதே வாழ்கிறார்கள்
வாழ்வில் விடியல்கள் ஏதுமின்றி.

இப்புவியில் பெண்ணாய்ப் பிறந்தால்
பலரும் பலதுக்கும் படுதுன்பமே!
வீட்டிற்குள் தட்டிப் பணிக்கப்ட்டு
வளர்க்கப்படும் பெண் அவள்
செல்லும் இடங்களெல்லாம் முடங்கியே வாழ்கிறாள்.

கண்கண்ட தெய்வமாய்
போற்றப்படும் கணவன் பெண்ணை
காலில் போட்டு மிதிக்கும்போது
அவள் சகலதையும் தெலைத்தே விடுகிறாள்.

பெண்ணாதிக்க வன்முறைக்குள்
சிக்கிவிடும் பெண்ணும் வெளியில்
எதையும் கொட்டிட முடியாமல் தன்னை
தான் அழித்தே விடுகிறாள் தன்
இயலாமையை கொட்ட முடியாமல்.

வாழ்க்கை இனியது அதில்
பலதும் பத்தம் வந்தே போகும்
அதில் ஆணென்ன பெண்ணென்ன
எல்லாமே ஒன்றென நினைத்து பெற்றோர்
பிள்ளைகளை முறையாய் வளர்த்தலே சிறப்பு.

மனவலிமை தனனம்பிக்கை என்பன
அடிமனதில் ஆழமாய் வேரூன்ற
காலமே பெரும் படிப்பினையாய்
மாறியும் விடுகிறது.

இதற்குள் பெண்மை எழுந்து விடுதலே 
சாலச் சிறந்தது அதுவே வாழ்வியலில்
வெற்றியின் சுவடாய் மாறியும் விடும்

ஆதலால்...மனிதம் மதிக்கப்பட
பெண்மை போற்றப்பட நம்
வாழ்வியலில் நாம் சிறக்க நம்
காலத்தை நாம் வென்றிட நாம்
அனைவரும் தூயஉள்ளத்தால் ஒன்றிணைவோம்.

Post a Comment

0 Comments