17- 10- 2021 அன்று மாலை 6-00 மணிக்கு தமிழ்ச் சங்கமம், தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் இணைந்து நடத்திய தமிழ் உரிமை மீட்பு எழுச்சி மாநாடு பரப்புரைக் கூட்டம் இணையவழி ZOOM Meeting வழியாக மிகச் சிறப்பாக நடைபெற்றது... கூட்டத்திற்கு தமிழ்ச்சங்கமத் தலைவர் திரு.செ.துரைசாமி ஐயா அவர்கள் தலைமை தாங்கினார்...சிற்றிதழ்கள் சங்கத் தலைவர் திரு. பூ.அ.இரவீந்திரன் அவர்கள் அறிமுக உரையாற்றினார்...
கம்பன் கழகத் தலைவர் மருத்துவர் திரு. கு.சுப்ரமணியன் அவர்கள் தொடக்க உரையாற்றினார்... முனைவர் வெ.அர. தாரணி., உளவியல் பேராசிரியர் திரு. பொன்.சந்திரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்... தொடர்ந்து கல்லூரி மாணவர்களின் கவியரங்கம் "செந்தமிழ் நாடெனும் போதினிலே"... எனும் தலைப்பில் நடைபெற்றது., எழுச்சி உரையாக தமிழக அரசின் திருவள்ளுவர் விருதாளர்., தமிழ்ச் செம்மல், குறள் யோகி., உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் மு.க.அன்வர் பாட்சா அவர்கள் சிறப்புரை யாற்றினார்...திரளாக தமிழ்ச் சான்றோர் பலர் பங்கேற்ற நிகழ்வில் பங்கேற்ற சான்றோர் பெருமக்கள் தங்களுடைய கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்...நிகழ்ச்சியில் முனைவர் இரா.கிருஷ்ண பாரதி குறளிசைப் பாடல் பாடினார்...நிறைவாக அமைப்பின் பொருளாளர் திரு.மணி அவர்கள் நன்றி நவில நிகழ்வு மிக இனிதாக நிறைவுற்றது...



0 Comments