02.10.2021
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடலென்ற வள்ளுவத்தைக்
கண்ணுங் கருத்துமாகப் போற்றியே வாழ்ந்தவர்!
இந்திய நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட
தன்னிக ரில்லா மகாத்மாவை வாழ்த்துவோம்!
என்றும் நினைத்து வணங்கு.
02.10.21
தோன்றின் புகழொடு் தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்றென்றார் வள்ளுவர்!
வாய்மையும் நேர்மையும் நல்லொழுக்கப் பண்புகளும்
காமராசர் பின்பற்றி வாழ்ந்திருந்த முத்துகள்!
காமராசர் போலொருவார் யார்?
02.10.21
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்தென்றார் அய்யன்!
பெரியநாடு இந்தியாவைப் பார்புகழ ஆண்ட
பெருமை படைத்தவர் லால்பகதூர் ! உண்மை!
அருமைத் தலைவரைப் போற்று.
மதுரை பாபாராஜ்





0 Comments