விழி வழி வழிந்த கண்ணீர்...
விதி வழி ஓடுகிறது...
விதி வழி செல்லும் வாழ்க்கை...
விடையின்றி சிதைகிறது..
வாழ்க்கையின் துயர்...
வரையரை இன்றி தாக்க..
வாழ வழியின்றி...
விதி வழி செல்லவும் தோன்றுகிறது..
வினாக்கள் ஆயிரம்
மனதில் இருந்த போதும்...
யாரிடம் கேட்பது...
விடை கான முடியா...
வினாக்களை...
தொலைந்து போன வாழ்க்கையை
தொடர முடியவில்லை..
இடையில் வரும் உறவுகளை ...
வெறுக்கவும் முடியவில்லை...
இருந்த போதும்...
வாழ சொல்கிறது இன்னும் வாழ்க்கை..
ஏதோ ஒரு நினைவு மட்டும்...
எங்கோ இருக்க...
வாழ சொல்கிறது வாழ்க்கை...
எதிர் பார்ப்புகள்
நிறை வேறா விடினும்...
ஏழை மனதின் தேடல்...
இன்னும் ஓயவில்லை...
தேடிக் கிடைப்பதில்லை...
என்று தெரிந்த போதும்..
தேடும் தேடல் ஓயவில்லை..
தேடலின் வழியல் வாழ்க்கை...
பட்டுப் போன தளிர்...
துளிர ஒரு மழைத்துளி போதும்...
பட்டுப் போகும் வாழ்க்கை...
மலர ஒரு அன்பின் துனை போதும்...
என்று சொல்கிறது இதயம்...


0 Comments