வீழ்ந்து விட்டால்
அது தோல்வியல்ல
உன்னால் எழ மு டியும்
கைகள் இரண்டு போதும்
ஊன்றி எழுவதற்கு
மீண்டும் உன்னால்
நடக்க முடியும்
நடந்து பார்
முன்னை விடவும்
உன்னால் வேகமாக
நடக்க முடியும்
கைகளை விடவும்
உறுதியானது உன்
தன்னம்பிக்கை
தொடர்ந்து செல்
தளர்ந்திடாதே உன்
இலக்கை அடையும்
வரை தொடர்ந்து செல்.
வீழ்ந்தவரை கை கொடுத்து
உதவுவதை விட
மீண்டும் தடுக்கி விட
மாட்டானா என
பார்க்கும் கண்களே
அதிகம் அவற்றை நீ
சட்டை செய்தால் உன்
பயணம் தான்
தாமதமாகும் தளராதே
பழிச் சொற்கள் உன்னை
பயமுறுத்தலாம்
அச்சம் கொள்ளாதே
விழித்திருக்கும் உன்
உணர்வுகளின் உறுதுணையோடு
வீறு நடை போடு
வெற்றியை நாடி
வெளியிறங்கினால்
வேதனைகளும் சோதனைகளும்கை
கோர்த்து விடும்
அவற்றை எதிர் கொள்ள
பற்றிப் பிடித்துக்கொள்
உன் மனவலிமை
வாழ்வில் முடியாது என்று
எதுவுமில்லை.
தாழ்வு வருவதும் ஆழ்
மனதின் அறிவுறைகளே
உன்னகத்தின் உறுதியே
உன்னை வெற்றிப்
பாதைக்கு இட்டுச்
செல்லும் தொடர்ந்திடு
உன் வெற்றிப் பாதையில்.


0 Comments