கவியரசி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமாவுடன் ஒரு நேர்காணல்-3

கவியரசி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமாவுடன் ஒரு நேர்காணல்-3

(காலஞ்சென்ற இஸ்மத் பாத்திமா அவர்களுக்கு வல்ல அல்லாஹ் நல்லருள் பாளிப்பானாக!.Nov 13, 2021 ஆம் ஆண்டு இஸ்மத் பாத்திமா அவர்களுடனான வேட்டைநேர்காணலை மீண்டும் பதிவிடுகின்றோம்.)

சென்ற இதழின் தொடர்ச்சி..!

Nov 27, 2021

நேர்கண்டவர் அதிபர், கவிஞர் : ஸல்மானுல் ஹாரிஸ்  

கவிஞர்.ஸல்மானுல் ஹாரிஸ்:கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டன. அந்தக் காலத்தில் மாணவர்களின் நலனை பாதுகாள்ப்பதற்காக வீட்டில் இருந்த மாணவர்களுக்காக   நீங்கள் பாடசாலையில் மாணவர்களின் கல்வி நலனைப் பாதுகாப்பதற்காக நீங்கள் முன் வைத்த வேலைத் திட்டங்கள் என்ன? மேலும் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு அரசு அறிவித்த நிலையில் ஒரு பாடசாலையை மீள ஆரம்பிப்பதற்கான சுகாதார நடைமுறைகள் அது பற்றிய பாதுகாப்பு  பற்றி குறிப்பிடுங்களேன்.

கவியரசி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா;Covid-19 மூலம் முழு உலகமும் பாதிக்கப்பட்டதில் இலங்கையும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் இலங்கையின் எதிர்கால சந்ததிகளைப் பாதுகாக்கும் முகமாக சகல பாடசாலைகளுக்கும் காலவரையறையின்றி விடுமுறை வழங்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் மாணவர்களுடைய கல்வி நடவடிக்கைகளை பாதிக்காதிருப்பதற்காக அதிபராக நான் பல முயற்சிகளை கையாண்டேன். அந்த வகையில் ஒவ்வொரு வகுப்புகளுக்கும் மாணவர்கள், வகுப்பாசிரியர், பாட ஆசிரியர்களை, பகுதித் தலைவர் ஆகியோரை சேர்த்து இணைத்து வாட்ஸ்அப் குழுமங்களை அமைத்தேன். இதன் போது ஆசிரியர்கள் பெற்றோர்கள் யாவரும் பூரண ஒத்துழைப்பை வழங்கினார்கள். அந்த குழுமங்களில் சகல ஆசிரியர்களுக்கும் கற்பித்தல் பணியை நடாத்துமாறு அன்புடன் கேட்டுக் கொண்டேன். சில ஆசிரியர்கள் watsapp video, audio & photos மூலமும் சில ஆசிரியர்கள் Zoom ஊடாக, Google meet ஊடாக கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். பரீட்சையை Google forms ஊடாக செய்வித்தார்கள். இது மிகவும் வெற்றிகரமான செயற்பாடாக இருந்தது. மேலும் அவற்றை நானும் அவ்வப்போது மேற்பார்வையும் செய்தேன். மேலும் மாணவர்களிடமிருந்து feedback இனையும் பெற்றேன். பிறகு அவற்றை குறிப்பிட்ட ஆசிரியர்களுக்குத் தெரியப்படுத்தி கற்பித்தல் நடவடிக்கைகளை சீர்செய்து கொண்டோம்.


மேலும் மாணவர்களுக்கு அவர்களுடைய ஆக்கங்களை சிறிய வீடியோக்கள் மூலம் பாட்டு, கதை, பேச்சு, நடனம், விடுகதை உரையாடல் போன்ற ஏதேனும் ஒரு ஆக்கத்தினை வீடியோ செய்து அனுப்பும் படியும் கேட்டுக்கொண்டேன். இதனை நிறைய மாணவர்கள் அனுப்பினார்கள். இதனை பெற்றோர்கள் மிகவும் ஈடுபாட்டுடன் செய்வித்தார்கள். இதற்கு ஆசிரியர்களது ஒத்துழைப்பும் கூடவே இருந்தது. அந்த வீடியோக்களை என்னுடைய முகநூல் பக்கத்தில் upload செய்துஅந்த link ஐ அம்மாணவர்களுக்கு அனுப்ப ஏனைய மாணவர்களும் அதனைப் பார்த்துவிட்டு மிகவும் அக்கறையுடன் ஈடுபட்டார்கள். மேலும் மாணவர்கள் உள ரீதியாகப் பாதிக்கப்படாதிருப்பதற்காக மாணவர்களோடு ஆசிரியர்களும் நானும் வாரத்திற்கு ஒரு முறையேனும் தொலைபேசியூடே உறையாடினோம்.

அத்தோடு தரம் ஒன்று மாணவர்களது பெற்றோர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைத்தோம். அவற்றை பெற்றோர்கள் பிள்ளைகளைக் கொண்டு நட்டு அவற்றின் புகைப்படங்கள் காணொளிகளை அனுப்பி வைத்தார்கள். மேலும் சகல மாணவர்களுக்கும் பல்வேறுபட்ட சித்திரங்களையும் வரைய வைத்து அவற்றின் புகைப்படங்களைப் பெற்று அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவற்றை என்னுடைய முகப்புத்தகத்தில் Facebook இல் upload செய்தேன். இது மற்றைய மாணவர்களை மேலும் தூண்டும் நிகழ்வாக இருந்தது.

மேலும் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு அரசு வழங்கிய சுற்றுநிருபத்திற்கு அமைய அரசு அறிவித்த அமைப்புக்கேற்ப கை கழுவுகதற்கான ஏற்பாடுகள், உடம்பின் உஷ்ணத்தை அறிந்து கொள்ள தேவையான உபகரணம் வாங்கி, Banner ஐ காட்சிப்படுத்தி மற்றும் இதர கை கழுவுதல், பாதணிகள் கழுவுதல் போன்ற தேவைப்பாடுகளையும் செய்வித்து மேலதிகமாக நீரருந்தும் வசதிகள், மேலதிக மலசலகூட வசதிகள், வகுப்பைக் கழுவி, சுத்தப்படுத்தி, தொற்று நீக்கி, ஆசனங்களை ஒரு மீட்டர் தூரப்படுத்தி மாணவர்களது இருக்கைகளை அமைத்து மாணவர்களது ஆசிரியர்களது பாடசாலையின் பூரண பாதுகாப்பையும் கருதி பாடசாலையை மீள ஆரம்பிப்பதற்கான சகலவிதமான சுகாதார நடைமுறைகளையும் செய்ய வேண்டி இருந்தது. மேலும் முதலுதவி சம்பந்தமான அறை, அதற்கு தேவையான ஆண், பெண் மாணவர்களுக்கு தேவையான கட்டில் வசதிகள் முதலுதவிப் பெட்டிக்கு தேவையான மருந்துப் பொருட்கள் போன்ற சகலவிதமான ஏற்பாடுகளையும் செய்து சிரமதானப் பணிகளையும் மேற்கொண்டு பாடசாலையை மீள ஆரம்பம் செய்தோம். இதன் போது ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் யாவரும் பூரண ஒத்துழைப்பை வழங்கினார்கள்.

கவிஞர்.ஸல்மானுல் ஹாரிஸ்:ஒரு ஆங்கில ஆசிரியராக, ஆங்கில ஆசிரிய ஆலோசகராக பின்னர் அதிபராக கடமையாற்றிய நீங்கள் இரண்டு தமிழ் மொழி மூலமான கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளீர்கள். அவை பற்றிய உங்கள் பகிர்வு என்ன? நீங்கள் அடுத்து என்ன நூலை வெளியிட உத்தேசித்துள்ளீர்கள்?

கவியரசி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா;நான் இதுவரை 2017 இல் "இரண்டும் ஒன்று 2019 இல் "புதையல் தேடி" என இரண்டு தமிழ் மொழி மூலமான கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளேன். அவை சிறந்த புத்தகங்களாக இருக்கின்றன. இந்த இரண்டு புத்தகங்களும் தேசிய ஆவணவாக்கல் திணைக்களத்தினால் மற்றும் கொழும்பு தேசிய நூலகத்தினாலும் ஒரு தொகைப் புத்தகங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அத்தோடு எனது இரண்டாவது நூல் தேசிய சாகித்திய விருதுக்கு முதல் மூன்று நினைகளுக்குள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியியத் தருகிறது. மேலும் என்னுடைய இரண்டு புத்தகங்களையும் முஸ்லிம் கலாச்சார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்திற்கு கொள்வனவுத் தேர்விற்கு அனுப்பியுள்ளேன். கூடிய சீக்கிரம் நாடு இயல்பு நிலைக்கு வந்த பின்னர் அந்த கொள்வனவும் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன். இறைவனுக்கே எல்லாப் புகழும் இனிவரும் காலங்களில் அடுத்ததாக ஆங்கில மொழியில் பெண்ணின் பெருமை பற்றிய ஒரு நூலை மற்றும் சிறுவர் இலக்கிடம் சம்பந்தமான நூல்கள், தமிழில் கவிதைத் தொகுதிகளை  வெளியிட உத்தேரித்துள்ளேன் இதற்கு இறைவன் அருசி புரிய வேண்டும்.

கவிஞர்.ஸல்மானுல் ஹாரிஸ்:நீங்கள் ஒரு அதிபராக கவிஞராக எழுத்தாளராக சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

கவியரசி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா;ஒவ்வொரு நபரையும் இறைவன் ஒரு நோக்கத்திற்காகத் தான் படைத்தான். எனவே அந்த நோக்கத்தை நாம் உணர்ந்து கொண்டு எம்மை நாம் சமூகத்தில் சிறந்த மனிதர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும். அதற்காக நாம் பாடுபட்டு உழைக்க வேண்டும். முயற்சி செய்யாமல் கிடைக்கும் எதுவும் அதிஷ்டமாகத் தான் கருதப்படும். மிகுந்த முயற்சியின் விளைவாக கிடைப்பது தான் வெற்றியாக கருதப்படும். எனவே நாம் அதிஷ்டத்தில் ஆசை வைக்காமல் வெற்றியில் ஆசை வைக்க வேண்டும். அப்போது தான் வெற்றியைக் கொண்டாட முடியும். மேலும் ஒவ்வொருவரும் தனக்கு கிடைக்கும். சந்தரப்பங்களை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் நல்ல சந்தர்ப்பம் என்பது எப்போதும் எம்மை எட்டிப்பார்ப்பதில்லை.

அதே நேரம், வாழ்க்கையில் யாரும் யாருடைய நிம்மதியையோ சந்தோஷத்தையோ சீர்குலைக்க முயலக் கூடாது.  அவ்வாறு நீங்கள் மற்றவருடைய வாழ்க்கையை  மனநிம்மதியை சீர்குலைக்க முயலும் போது அதற்குண்டான தண்டனை இறைவனிடம் இருந்து  இயற்கையாகவே உங்களுக்கு வந்து சேரும். எப்போதும் மற்றவர்களுக்கு நல்லவற்றையே விரும்புங்கள். அப்போது உங்களுக்கும் எல்லாம் நல்லதாகவே அமையும், எப்போதும் மற்றவரைத் தாழ்த்தியோ தாக்கியோ பேசாதீர்கள். அவ்வாறு நீங்கள் நடந்து கொண்டால். யாரை நீங்கள் தாக்கியோ தாழ்த்தியோ வீழ்த்தப் பேசினீர்களோ அவர்களிடமே தாழ்ந்து வீழ்ந்து கிடக்க வேண்டி ஏற்படும். இறைவன் தண்டனைகளை உடனுக்குடனே கொடுத்து விடுவான். அரசன் அன்று ஆள்வான். தெய்வம் நின்று கொல்லும் மேலும் இயற்கையை இரசியுங்கள். நேசியுங்கள், அன்பு காட்டுங்கள். உங்களுக்கு எப்போதும் இளமையாக இயல்பாக சந்தோஷமாக இருக்கலாம்.

என்னை சமூகம் சார்பாக நேர்கண்ட வேட்டை சஞ்சிகைக்கும் சகோதரர் கவிஞர் பஹ்மி ஹலீம்தீன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
(முற்றும்)


Post a Comment

Previous Post Next Post