ஐக்கிய அரபு அமீரகத்தில் 14 வகை விதிமீறல்கள்: 20,000 திர்ஹம் வரை அபராதம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் 14 வகை விதிமீறல்கள்: 20,000 திர்ஹம் வரை அபராதம்


அமீரகத்தில் உள்ள குடிமக்கள் மற்றும் ரெசிடென்ஸி விசா வைத்திருக்கும் குடியிருப்பாளர்கள் ஆகிய அனைவருக்குமே நாட்டில் தங்குவதற்கு மிக முக்கிய அடையாள அட்டையாக விளங்குவது எமிரேட்ஸ் ஐடியாகும். இந்த எமிரேட்ஸ் ஐடிக்கான விதிகளில் மீறல்கள் புரிந்தால் அபராதம் விதிக்கப்பட்டு வருவது வழமையாக இருந்து வருகின்றது. 

ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம், துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டி (ICP) எமிரேட்ஸ் ஐடி கார்டு சேவைகள், ரெசிடென்ஸி சேவைகள் மற்றும் வெளிநாட்டினரின் விவகாரங்களுக்கு பொருந்தும் பல்வேறு வகையான நிர்வாக மீறல்களை அடையாளம் கண்டு, மீறல் வகையைப் பொறுத்து அபராதம் மாறுபடும் என குறிப்பிட்டுள்ளது.  

ஏற்கெனவே இந்த நடைமுறை அமலில் இருந்து வரும் பட்சத்தில் தற்பொழுது சமீபத்திய புதுப்பிப்புகளின்படி, விதிமீறல்களுக்கான அபராத பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி 14 விதிமீறல்களின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விதிமீறல்களை பொறுத்து அபராதம் 20 திர்ஹம் முதல் 20,000 திர்ஹம் வரை மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

  • நபர் பணிபுரியும் நிறுவனத்திற்கு சொந்தமில்லாத பரிவர்த்தனைகளை சமர்ப்பித்தல் 
  • நபர் பணிபுரியும் நிறுவனத்திற்கு சொந்தமில்லாத பரிவர்த்தனைகளை மூலம் உள்ளிடுதல் 
  • அட்டை காலாவதியாகி விடுதல்
  • பரிவர்த்தனைகளைச் சமர்ப்பிக்கும்போது அட்டையை எடுத்துச் செல்லாமல் இருத்தல்
  • சேவை வழங்கல் மையங்களில் பணி முறையை மீறுதல்
  • ICP-க்கு அளித்த உறுதிமொழியை கடைபிடிக்க தவறுதல்
 இந்த 6 விதிமீறல்களுக்கும் 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.
  • அமைப்பை தவறான முறையில் பயன்படுத்துதல்
  • பரிவர்த்தனையை முடிப்பதற்கான பொறுப்பான துறை ஊழியர்களின் வேலையைத் தடுத்தல்
  • அவர்களுடன் ஒத்துழைக்கத் தவறுதல்
  • சேவையைப் பெறுவதற்குத் தேவையான கட்டணத்தை பயனர்கள் செலுத்தத் தவறுதல் 

மேற்கண்ட விதிமீறல்களுக்கு 5,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.

  • கணினி பயனர்களிடமிருந்து விண்ணப்பங்களை அச்சிடுவதில் துல்லியமின்மை ,
  • சேவை பெறுபவர்களிடமிருந்து தவறான தரவை வழங்குதல்
  •  எந்தவொரு செயல்பாட்டிலும் ஈடுபடாத ஒரு நிறுவனத்திற்கு விசாக்கள் அல்லது நுழைவு அனுமதிகளை வழங்குதல்
  • அடையாள அட்டையை பதிவு செய்து வழங்குவதில் தாமதம், 
  • மற்றும் அடையாள அட்டையை அதன் காலாவதி தேதியிலிருந்து 30 நாட்களுக்குப் பிறகு புதுப்பிப்பதில் தாமதம்
அபராதம்

சிஸ்டம் பயனர்களிடமிருந்து அப்ளிகேஷன்களை பிரிண்டிங் செய்வதில் உள்ள தவறுக்கான அபராதம் 100 திர்ஹம், அதே சமயம் சேவை பெறுபவர்களிடமிருந்து தவறான தரவை வழங்கினால் 3,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.

அத்துடன் செயல்பாட்டில் இல்லாத ஸ்தாபனத்திற்கு விசாக்கள் அல்லது நுழைவு அனுமதிகளை வழங்குவதற்கான அபராதம் 20,000 திர்ஹம்.

 அதே நேரம் அடையாள அட்டை சேவைகளுக்குப் பொருந்தும் நிர்வாக அபராதங்களின் பட்டியலில் இரண்டு வகைகள் உள்ளன.

அவை அடையாள அட்டையைப் பதிவுசெய்து வழங்குவதில் தாமதம் மற்றும் காலாவதி தேதியிலிருந்து 30 நாட்களுக்குப் பிறகு அடையாள அட்டையைப் புதுப்பிப்பதில் தாமதம் ஆகியவை ஆகும். ஐடி புதுப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டால் ஒவ்வொரு நாளின் தாமதத்திற்கும் பொருந்தக்கூடிய அபராதம் 20 திர்ஹம் மற்றும் அதிகபட்சம் 1,000 திர்ஹம் வரை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

nambikkai



 



Post a Comment

Previous Post Next Post