39 வருடங்களுக்கு முன்பு காணாமல்போன சிறுமி... திருப்பத்தை ஏற்படுத்திய பெண்ணின் பேஸ்புக் பதிவு! நடந்தது என்ன?

39 வருடங்களுக்கு முன்பு காணாமல்போன சிறுமி... திருப்பத்தை ஏற்படுத்திய பெண்ணின் பேஸ்புக் பதிவு! நடந்தது என்ன?


39 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிறுமி தான் என்று கூறி பெண் ஒருவர் கூறியுள்ளது வழக்கு ஒன்றில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த பெண் காணாமல் போன தனது மகள் அல்ல என தாய் மறுத்துள்ளார்.

செர்ரி மஹான் என்ற சிறுமி, கடைசியாக பிப்ரவரி மாதம் 1985-ல் பென்சில்வேனியாவின் வின்ஃபீல்ட் டவுன்ஷிப்பில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே தனது பள்ளி பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டுள்ளார், ஆனால் அதற்கு பின்னர் அவர் வீட்டிற்குச் செல்லாமல் காணாமல் போயுள்ளார். ஒன்றல்ல, இரண்டல்ல, 39 ஆண்டுகளுக்குப் பின் தற்போது அவர் திரும்பியுள்ளதாக கூறுகின்றனர்.

தன்னை செர்ரி என்று அடையாளப்படுத்திக் கொண்ட அந்த பெண், 39 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன அதே பெண்தான் என்றும், ஆனால் இதனை அவரது தாயார் நம்பவில்லை என்றும் கூறியுள்ளார். இதன் பின்னணி குறித்தும் அவர் கூறியுள்ளார். இது முதல் முறை அல்ல என்றும், இதற்கு முன், மேலும் மூன்று பெண்கள் தாங்கள் செர்ரி என்று கூறி தன்னிடம் வந்ததாக கூறியுள்ளார்.

கடந்த மாதம் “செர்ரி மஹானின் நினைவுகள்” என்ற பேஸ்புக் குழுவில் பெயரிடப்படாத பெண் ஒருவர் பதிவிட்ட பதிவுதான், ​​​​இந்த வழக்கு ஒரு புதிய திருப்பத்தை எடுக்க வழிகாட்டியுள்ளது. இந்த கூற்றுகள் குறித்தும் விசாரிக்க மாநில காவல்துறை ஆயத்தமாகி வருவதாக கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, செர்ரியை தேடி வரும் நிலையில், செர்ரி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 5,000 டாலர்கள் (சுமார் ரூ.4 லட்சத்து 17 ஆயிரம்) பரிசு வழங்கப்படும் என அவரது தாயார் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இருந்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இவை அனைத்திற்கும் மத்தியில், தன்னை செர்ரி என்று சுட்டிக்காட்டும் பேஸ்புக் பதிவையும் பென்சில்வேனியா காவல்துறை நீக்கியுள்ளது. வேறு மாநிலத்தைச் சேர்ந்த வெளி நிறுவனத்துடன் தொடர்புகொண்டு விசாரித்து வருகின்றனர். மேலும், தன்னை செர்ரி என்று அழைக்கும் பெண்ணை அடையாளம் காணும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

news18


 



Post a Comment

Previous Post Next Post