பசித்திருப்பவனுக்கு
உணவளிக்கும் போது
அது
வெள்ளை நிறமாகவும்
கோபம் கொப்பளிக்கும்
கொந்தளிப்பான நேரங்களில்
அது
கறுப்பு நிறமாகவும்
பற்றிப் படரும் கொடிகளுக்கு
நீர் வார்க்கும் போது
அது
பச்சை நிறமாகவும்
கொடுமை கண்டு
குமுறும் போது
அது
சிவப்பு நிறமாகவும்
அகம் நிறைந்து
வாழ்த்தும் போது
அது
மஞ்சள் நிறமாகவும்
தன்னை மாற்றிக்கொள்ளும் என்பது
எனது கற்பனையின்
அதீத வளர்ச்சியாக
தென்படலாம்
கூடவே பயணிப்பதால்
ஒன்று மட்டும்
தீர்க்கமாகப் புலப்படுகிறது
"அடிக்கடி நிறம் மாறுகிறது
மனசு...".


0 Comments