சிலுசிலுவென்று வயலுக்குள்ள காத்து வீச
சலசலவென்று ஏரிக்குள்ள தண்ணியோட
மஞ்சவெயிலும் மனசுக்குள்ளே மகிழ்ச்சி தர
மாராப்பு சேலையோட மனச அள்ளி
மந்திரப் புன்னகையில் என்னக்கிள்ளி
மலையழகி மதிபோலக் கிளம்பி வாறா
மனச மயக்கியே மகிழ்ச்சி தாறா
கரிசல் காட்டு கன்னிப் பெண்ணே
களையெடுக்க வந்த சின்னப்பெண்ணே
களையெடுத்தே எம்மனசக்
கலச்சித்தான் போட்டவளே
சிவப்பான இதழினிலே
செந்தேனைக் கொண்டவளே
சிலைபோல அழகினிலே
சிற்றிதயம் கொன்றவளே
கண்ணாடி வளையலோ
கண்ணைப் பறிக்குதடி
கருகுமணி மாலையோ
கழுத்துக்குப் பொருந்துதடி
சின்னக்கையாலே செம்பருத்தி
வேலை செய்ய சிவந்தே கண்டித்தான்
நோக்காடு வந்திடுமோ


1 Comments
கவிதை பிரசுரமானதையிட்டுப் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றி.
ReplyDelete