இந்நிகழ்வு இன்று 09-11-2021 ஆம் திகதி சமகி ஜன பலவேகய தலைமையகத்தில் நடைபெற்றது.
நியமனத்தை கட்சித் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான கௌ. சஜித் பிரேமதாச அவர்கள் வழங்கி வைத்ததுடன்
கட்சி அங்கத்துவத்தை கட்சியின் பொதுச் செயலாளர்
கௌ. ரன்ஜித் மத்தும பன்டார அவர்களும் வழங்கி வைத்தனர்.
பஸ்லான் பாரூக் அவர்களுக்கு கிடைத்த இந்த நிகழ்வைப் பற்றி
Rin tv வினவியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்
பதவிகளை நான் தேடிப் போவதில்லை பதவிகள் தேடி வரும் பட்சத்தில் அந்தப் பதவியை பயன்படுத்தி மக்களுக்கு எவ்வாறான சேவையை செய்ய வேண்டும் என்ற விடயத்தில் நான் தெளிவாக இருக்கின்றேன்
அந்த அடிப்படையில் கம்பளையை பொருத்தவரையில் காதர் ஹாஜியார் அவர்களுக்குப் பிறகு நீண்ட நாள் அரசியல் வெற்றிடம் ஒன்று இருக்கின்றது
இந்த விடயம் மக்களுக்கும் ஒரு பெரிய குறையாக இருந்ததை நான் அவதானித்திருக்கிறேன்
அந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்யும் வகையில் சமகி ஜன பல வேக கட்சி எனக்கு அந்த வாய்ப்பைத் தந்து
அந்த வகையில் மக்களின் எதிர்பார்ப்பை முழுமையாக உணர்ந்த நான் இந்த சந்தர்ப்பத்தை
கம்பளை எனது ஊர் மக்களுக்கும் கண்டி எனது மாவட்ட மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் பயன்படுத்துவேன் என்ன மக்களுக்கு உறுதி கூறுகின்றேன் என்று குறிப்பிட்டார்
ஊடகக் குறிப்பு; திறமையானவர்களுக்கு பொருத்தமான பதவிகளை வழங்கினால் நாடு முன்னேறும்


0 Comments