(உளவியல் ஆலோசகர் லைலா அக்ஷியாவின் அனுபவத் துளிகள்)
பிள்ளைகள்!!அழகழகாய் இப் பூமிக்கு உயிர் கொடுக்கும், மனிதனென்ற பத்திரத்தில் போலியோ, கலப்படமோ துளியளவும் கலந்துவிடாத தூய்மையான பருவம் அது .உலகத்தில் தான் இருக்கும் இடத்தை மட்டுமல்ல. தன்னை மட்டுமல்ல.தன்னைச்சூழ உள்ள பிற மனித மனங்களையும் சந்தோஷபடுத்தும் ரசனை மிகுந்த படைப்பு அது.
பிள்ளைகளின் கல்வி, பரீட்சை, எதிர்காலம்,வழிகாட்டல், முயற்சிகள், சாதனைகள், ஆரோக்கியம் என போட்டி நிறைந்த உலகில் பொறுப்பான ஒரு பெற்றோர்களாக நின்று அவர்களின் வாழ்க்கையோடு போட்டி போட்டுக் கொண்டிருப்பவகளுக்கு, எதிர்பாராதவிதமாக பிள்ளைகள் அசாதாரணமாக பிறந்து விடும்போது , அதிலிருந்து தம் பிள்ளை செல்வங்களை மீட்டெடுக்க வேண்டி போராடுகிறார்கள்.
இதுவே வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்து விடுகின்றன.
"ஆட்டிஸம் "என்பது சிறுவர்களின் மூளை நரம்பியலில் ஏற்படும் கோளாறு .பாதிக்கப்பட்ட பிள்ளை ஏனைய பிள்ளைகளிலிருந்தும் முற்றிலும் வித்தியாசமாக, வேறுபட்ட பிறழ்வு நடவடிக்கைகளையும் கொண்டிருக்கும்.
இனி என் அனுபவத்தோடு அடுத்து..
"மிஸ் கொஞ்சம் வந்து பாருங்க..
என்னால இத பாக்க முடியல.."
"டீச்சர் இப்ப என்ன பண்றது? இந்த பிள்ளை இப்படி பண்ணி இருக்குதே.."
அடிக்கடி என்று இல்லாமல் அவ்வப்போது என் காதில் வந்து விழும் வார்த்தைகள் இவை.
எமக்கு ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை எப்படி பொறுப்பேற்று கையாளுகின்றோம் என்பதை சோதிப்பதற்காக, இறைவன் ஏற்படுத்தி வைக்கும் தருணங்கள், அடியானுக்கு ஒரு சவால்தான்.
பிள்ளைகளின் இயற்கை தேவைகளை, காலைக்கடன்களை பெற்றோர்கள் வீட்டில் இருந்தே பூரணப்படுத்தி எல்லாவித ஆயுதங்களோடு ஒரு ஆசிரியரிடம் அனுப்பினாலும் கூட, திடீரென ஏற்படும் ஒருசில கோளாறுகளால் தன்னையே அறியாது 'அது' நிகழ்ந்து விடும் நிலையில், செய்வதறியாது நிற்கும் செல்வங்களை நான் காணுவதுண்டு.
இச்செல்வங்களுள் மலர்களும் உள்ளன. பட்டாம்பூச்சிகளும் உள்ளன.இவையிரண்டும் எம் உள்ளங்களை கொண்டாட வைக்கும் ஒரேவிதமான பிள்ளைகள்!!
அழகழகாய் இப் பூமிக்கு உயிர் கொடுக்கும், மனிதனென்ற பத்திரத்தில் போலியோ, கலப்படமோ துளியளவும் கலந்துவிடாத தூய்மையான பருவம் அது .
உலகத்தில் தான் இருக்கும் இடத்தை மட்டுமல்ல. தன்னை மட்டுமல்ல.தன்னைச்சூழ உள்ள பிற மனித மனங்களையும் சந்தோஷபடுத்தும் ரசனை மிகுந்த படைப்பு அது.
பிள்ளைகளின் கல்வி, பரீட்சை, எதிர்காலம்,வழிகாட்டல், முயற்சிகள், சாதனைகள், ஆரோக்கியம் என போட்டி நிறைந்த உலகில் பொறுப்பான ஒரு பெற்றோர்களாக நின்று பிள்ளைகளின் வாழ்க்கையோடு போட்டுக் கொண்டிருப்பவகளுக்கு தம் பிள்ளைகள் அசாதாரணமாக பிறந்து விடும்போது , அதிலிருந்து தம் பிள்ளைகளை மீட்டெடுக்க வேண்டி போராடுகிறார்கள். இதுவே வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்து விடுகின்றன.
"ஆட்டிஸம் குழந்தைகள்" பெற்றோர்களுக்கு மட்டுமல்ல. தம்மோடு கூட இருக்கும் ஆசிரியர்களுக்கு கூட ஒரு நல்லனுபவத்தினை அமைத்துக் கொடுக்கிறார்கள்.
"ஆட்டிஸம் "என்பது சிறுவர்களின் மூளை நரம்பியலில் ஏற்படும் கோளாறு .பாதிக்கப்பட்ட பிள்ளை ஏனைய பிள்ளைகளிலிருந்தும் முற்றிலும் வித்தியாசமாக, வேறுபட்ட பிறழ்வு நடவடிக்கைகளையும் கொண்டிருக்கும்.
இனி என் அனுபவத்தோடு அடுத்து.. சந்தோஷங்களை தான் தருவதாயினும், நான் மலர்கள் என சொல்வதற்கும், பட்டாம்பூச்சிகள் எனவும் நான் சொல்வதற்கும் வித்தியாசமிருக்கிறது.
குழந்தைகளோடு குழந்தைகளாய் பட்டாம் பூச்சிகளாய் பறந்து திரிந்து, மகிழ்ந்து, மன எழுச்சிகளை வெளிப்படுத்தும் செல்வங்களும் ,பிறந்து வளர்ந்தும் நகரா ஒரு மலராய், எம் வழிகாட்டலை மாத்திரம் பின்பற்றத் தெரிந்த பாவமறியா 'விஷேட' செல்வங்களும் ஆன இரு வகை உயிர்கள் தாம் அவை.
இவ்விரு சாராரும் எப்பொழுதுமே என்னால்
சமமாய் கணிக்கப்படுகிறார்கள்., ஒரே வகையான சந்தோஷத்தை தரக்கூடியவர்களாகவே எனக்குள் வாழ்கிறார்கள்.
உடலில் ஏற்படும் உணர்ச்சி மாற்றங்கள் மூளைக்குச் சென்று, மூளையிலிருந்து பிறப்பிக்கப்படும் கட்டளைகளில் தாமதம் ஏற்படுவதனால் அல்லது அது இல்லாத நிலையில், உடனடியான செயற் பாடுகளுக்குள் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடியாமற் போவது, இத்தகையவர்களது அறிகுறிகளில் ஒன்று.
அதில் ஒன்றாகத்தான் இவர்களது இயற்கை தேவையும் அமைந்து விடுகிறது. எல்லா நேரத்திலும் நாம் மற்றுமொருவரை (caretaker) இதற்காக வைத்திருப்பது ஒரு 'இலகுபடுத்தலாக' இருக்க வேண்டுமே தவிர நாம் இத்தகைய அசாதாரண நிலமைகளிலிருந்து ஒதுங்கியோ, விலகியோ விடுவதற்கான சந்தர்ப்பங்களாக அமைந்துவிடக் கூடாது.
இப்படி அவர்களால் கட்டுப்படுத்தப்பட முடியாத நேரங்களில்,தம் கால்கள் வழியாக இருக்குமிடம் முழுவதும் 'அது' பரவிக் கிடக்கும் போது , அப்பாவியாய் நின்று கொண்டிருக்கும் அப்பிஞ்சு உயிர்களின் கண்களில் ஒருவித மிரட்சி தெரியும்.
அந்த மிரட்சி எவருக்காகவும் வேண்டி தொடரவோ,
காக்க வைக்கவோ கூடாதென, உடனடியாக செயலில் இறங்க வைத்து விடுகிறது மனது.
பெண்ணென்ற படைப்புக்குள் இயற்கையாய் வாழ்வது தான் தாய்மையுணர்வு. இந்த உணர்வுக்கு, குறித்த பருவமொன்றோ குறித்த வயது தான் பொருத்த மென்றோ எந்தவித அவசியமும் இல்லாமல், எந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் அது அவசியமாகிறதோ அச் சந்தர்ப்பங்களில், உடனடியாக அது உள்ளிருந்து ஊற்றெடுத்து, நம் உடல் முழுதும் பற்றிக்கொள்கிறது. இது ஒரு பெண்ணுக்கு இயற்கையானதுதான்.
இனி.நான் எதிர்கொள்ளும் இத்தகைய சந்தர்ப்பங்களில், அவற்றைப் பார்ப்பதற்கும், துடைத்து சுத்தம் செய்வதற்கும், அடுத்தவர்களுக்கு அருவருப்பாய் ஆகிவிடக் கூடாதே என்பதற்குமாக மட்டுமல்லாமல் , இதையும்கூட இறைவன் ஒரு காரணத்திற்காக அல்லாமல் எனக்கு முகம்கொடுக்க வைத்திருக்க மாட்டான் என்றும், அவனது கண்காணிப்பு ஒவ்வொரு நொடியும் என் மீது இருக்கிறது என்ற எண்ணமும் அச்சமயங்களில் மீளெழுந்து கொண்டிருக்கும்.
'இத்தகைய சந்தர்ப்பங்களில் உன் பிரார்த்தனைகளை உள்ளத்தால் உடனடியாக கேட்டுக் கொள்..' என்ற தாயின் ஞாபகமூட்டல்கள் கூட வந்துவிடுகின்றன.
இறைவனுக்கே எல்லா புகழும்
இம்மையில் அவர்கள் எனக்காக பரிந்துரைக்க முடியாவிட்டாலும், மறுமையில் சாட்சி சொல்லக் கூடியவர்களாக இவர்களை நான் அடைந்திருப்பது இறைவன் எனக்களித்த பாக்கியம்.
ஆட்டிசம் குழந்தைகள்.
அறிகுறிகள்:
Child with of autistic spectrum.
symptoms
⭕கண் பார்வை தொடர்பு இன்மை (Avoid eye contact/poor eyecontact)
⭕புலன்களில் பிரச்சினை.
Sensory dysfunction.
⭕சிந்தனை, எண்ணங்களின் மாற்றம்.
Cognitive challenges
⭕நடத்தை கோளாறுகள் behavioral disturbances
⭕பேச்சுக் குறைபாடு.
speech problem/delay.
⭕அவர்களுக்கென்று ஒரு தனி உலகில் மட்டுமே இருப்பார்கள்.
Social interaction problem.
⭕ஒரே சொல்லை தொடர்ந்து அல்லது திருப்பித் திருப்பி கூறிக் கொண்டே இருத்தல் echolalia/monotonous speech.
⭕அர்த்தமற்ற ஒலிகளை எழுப்புதல்
Meaningless sound creating.
⭕கால் பாதங்கள் தரையில் வைக்காது கால்விரல்களால் வித்தியாசமாய் நடத்தல்.
Toe walking/abnormal body postuning.
⭕ஒரே செயலை திரும்பத் திரும்ப செய்தல்
Repetitive behaviour.
⭕ஒரு சில பொருட்களுக்கு சத்தங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இருப்பார்கள்.
Hyposensitivity.
⭕அதிகமாக உணர்ச்சிவசப்படுதல்/குறைந்த உணர்ச்சி வெளிப்பாட்டினை கொண்டிருத்தல்
Extreme /low sensitivity.
⭕தூக்கம் தொடர்பான பிரச்சினைகள்.
இனி மற்றுமொரு அனுபவப்பகிர்வுடன் உங்களை சந்திக்கிறேன்.
(தொடரும்)
Laila Akshiya.
(skills Insight)
Dip in psychology & counselling.
0 Comments