மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-30 (வரலாறு-பாகம்-2)

மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-30 (வரலாறு-பாகம்-2)



அம்பகஹலந்த 

சமீப காலம் வரை கும்புக்கந்துறைத் தாய் ஜமாஅத்துடன் இணைந்திருந்த அம்பகஹலந்த,  தற்போது தனியான  ஜமாஅத்தாக செயல்பட்டு வருகின்றது. சுமார் 370 குடும்பங்கள் வாழும் குடியிருப்பில் 1980ம் ஆண்டு பிரதேச மக்கள் முயற்சியில் அமைக்கப்பட்ட  தைக்கா அ 1990ம் ஆண்டு முதல் ஒர் ஜும்ஆ மஸ்ஜிதாக வளர்ச்சியடைந்தி ருக்கின்றது.

தக்கியா அமைக்கப் படுவதற்கான நிலம் குடியிருப்பைச் சேர்ந்த கனவான் ழு. டு. ஆ  அபூ ஸாலிஹ் அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்டதாகும்.   1997ம் ஆண்டு  அம்பகஹலந்த  ஜமாஅத்தினருக்காக சொந்தமாக ஒரு மையவாடியும் ஏற்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். அம்பகஹலந்தையைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்தும் கும்புக்கந்துறை அல்ஹிக்மா மகாவித்தியாலயத்தில் கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர். 

மஸ்ஜிதில் ஹிப்ழுள் குர்ஆன் பிரிவும் இயங்கி வருவதுடன் புதிதாக இஸ்லாத்தைத் தழுவும் அன்பர்களுக்காக ஒரு போதனா நிலையமும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்நிலையத்தில் பத்து மாணவர்கள் பயின்று வருகின்றனர். அம்பகஹலந்தையில் ஜும்ஆ மஸ்ஜித் தவிர்ந்த ஓர் தக்கியாவும் ~மஸ்ஜிதுல் குபா| என்ற பெயரில்; தாபிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

அம்பால:
தெல்தெனிய தேர்தல் தொகுதியில் மெததும்பற பிரதேச செயலகப்பிரிவில் அமைந்துள்ள குடியிருப்புக்கள் வரிசையில் அம்பாலை நான்காவது இடத்தை வகிக்கின்றது. கண்டி - மஹியங்கனை A -26 பிரதான பாதையிலிருந்து மொரகஹமுல சந்தியின் இடது பக்கமாக அமைந்துள்ள அம்பால கிராமத்தை வேடருவப் பாதையூடாகச் சென்றடைய முடியும். 1927ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட வேடருவ பாதையின் இரு மருங்கிலும் அமைந்துள்ள அம்பால முஸ்லிம் குடியிருப்பு இறுநூறு வருட காலத்தைக் கடந்து செல்லும்  வரலாற்றைக் கொண்டிருக்கின்றது.  சுமார் முப்பத்தைந்து குடும்பங்கள் வாழும் அம்பாலை முற்றிலும் உள்ளுர்க் குடிகளைக் கொண்டு உருவாகிய ஒரு குடியிருப்பாகும்.    அவர்களது மூதாதையர்கள் பள்ளேகல, கும்புக்கந்துறை, மடவலைப் பகுதிகளிலிருந்து குடிபெயர்ந்தோராவர் எனக்கூறப்படுவதுண்டு.  1982ம் ஆண்டு அம்பாலயில் ஒரு மஸ்ஜித் அமைக்கப்படும் வரை மக்கள் மொரகஹமுல சந்தியில் அமைக்கப்பட்டிருந்த மஸ்ஜிதுடன் இணைந்து செயல்பட்டு வந்துள்ளனர்.

மொரகஹமுல மஸ்ஜித் 1983ம் ஆண்டு விக்டோரியாத் திட்டத்தின் கீழ் பாதை விஸ்தரிப்புக்காக உடைக்கப் பட்டதைத் தொடர்ந்து, அம்பாலை மஸ்ஜித் ஸுவூதி அரேபியாவின் பிரபல கொடைவள்ளல் அஷ்ஷெய்க் ணஸாமில் அப்துல்லாவின் அன்பளிப்பால் நிர்மாணிக்கப்பட்டதாகும். 2005ம் ஆண்டு அமைக்கப்ட்ட இப்புதிய மஸ்ஜித் கலையம்சங்கள் நிறைந்த ஒரு மஸ்ஜிதாக எழுந்திருப்பதைக் காணலாம். சாதாரண தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் அம்பாலைவாசிகளது மாணவர்கள் அம்பால சிங்கள கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர்.  அம்பாலை முஸ்லிம் மையவாடியும்  இப்பாடசாலைக்குப் பக்கத்திலேயே  அமைந்திருக்கின்றது. அம்பாலை மஸ்ஜிதின் தலைவராக வர்த்தகப் பிரமுகர் ஏ. ஸீ. ஸுலைமான் விளங்கி வருகின்றார்.

மொரகஹமுல:
ஐம்பது வருடங்களுக்கு முதலில் சிறப்புடன் விளங்கிய மொரகஹமுல பட்டினம்  A- 26 கண்டி - மஹியங்களைப் பிரதான பாதையில்  முப்பத்தைந்தாவது கிலோ மீற்றரில் அமைந்திருக்கும் சிறிய வர்த்தகக் குடியிருப்புக்களுள் ஒன்றாகும்.  புராதனப் பெருமை மிக்க மஹியங்கனையை  அடையும் சந்தியில் அமைந்திருக்கும் மொரகஹமுலப் பட்டினத்தின் வரலாறு 1875ம் ஆண்டுகளைத் தொடர்ந்துள்ள காலங்களிலிருந்து பேசப்படுவதாகும்.

பிரதேசத்தின் பெரும் வர்த்தக ஜாம்பவான்களாகத் திகழ்ந்த ஆ.மு.ஆ வர்த்தக நிறுவனத்தார் புகழுடன் விளங்கிய மொரகஹமுல பட்டினத்தின் மஸ்ஜித் 1983ம் ஆண்டு விக்டோரியா நீர்த்தேக்கத்துக்குச் செல்லும் பாதை விஸ்தரிக்கப்பட்டபோது அகற்றப்பட்தைத் தொடர்ந்து, மஸ்ஜித்துக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நஷ்டஈட்டுத் தொகை அம்பாலை மஸ்ஜிதுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

மஸ்ஜிதின் நீண்டகாலப் பராமரிப்புப் பணிகள்  ஆ.மு.ஆ நிறுவனத்தின் கண்காணிப்பிலேயே இருந்து வந்திருக் கின்றது. மஸ்ஜிதுடன் இணைந்ததாகக் காணப்பட்;ட  மையவாடி நிலம் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பட்டின மக்கள் ஜும்ஆத் தொழுகை க்காக மெதமஹதுவரை  மஸ்ஜிதுக்குச் செல்கின்றனர். இன்று ஐந்து குடும்பங்கள் மாத்திரமே குடியிருப்பில் வாழ்ந்து வருவது கண்கூடு.

ரங்கல:
உடிஸ்பத்துவையைப் போன்று பெருந் தோட்டங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள ரங்கல பட்டினம்  இந்திய தமிழ், முஸ்லிம் வர்த்தகர்களது செல்வாக்கில் உருவாகிய பட்டினங்களுள் ஒன்றாகும்.  இன்று ஐந்து முஸ்லிம் குடும்பங்கள் மாத்திரமே வாழும் ரங்கலைப் பட்டினத்தில், முஸ்லிம்களுக்குச் சொந்தமாக ஆறு கடைகள்  காணப்படுகின்றன. பட்டினத்தைச் சேர்ந்த சமூக சேவையாளர் அல்ஹாஜ் S.M. பஷீர் பிரதேச சபை அங்கத்தவராகவும்  விளங்கிய பெருமைக்குரியவர்.(தொடரும்)

Post a Comment

Previous Post Next Post