மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-32 (வரலாறு-பாகம்-2)

மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-32 (வரலாறு-பாகம்-2)


கும்புக்கந்துறை-32
குண்டசாலைத் தேர்தல் தொகுதியில் அமைந்திருக்கும் அம்பகஹலந்த, திகன, கெங்கல்ல, பலகொள்ள, அளுத்வத்த, ஹிஜ்ராபுர குடியிருப்புக்கள் வரிசையில்  கும்புக்கந்துறை பிரதான இடத்தை வகிக்கின்றது. 

தும்பறைப் பள்ளத்தாக்கில் நக்ல்ஸ் மலைத் தொடர்களைத் தழுவியதாகக் காணப்படும் தும்பாணிய மலையடிவாரத்திலிருந்து ஊற்றெடுத்துப் பாய்ந்து மகாவலியுடன் சங்கமமாகும் ஹுலுகங்கைக் கரையில் உருவாகிய கும்புக்கந்துறை, மத்திய பிரதேசத்தில்  நீண்ட பூர்வீகத்தைக்  கொண்ட முஸ்லிம் குடியிருப்புக்களில் ஒன்றாகும். 

தும்பறைப் பிரதேசத்தில் பண்டைய சிங்கள மன்னர்கள் காலமுதல் புகழுடன் விளங்கிய கும்புக்கந்துறைக் குடியிருப்பின் வரலாறு மன்னன் நரேந்தர சிங்கன் (1707-1739) காலத்தோடு தொடர்புபடுத்திப் பேசப்படுவதுண்டு. அக்காலை தும்பறைப் பிரதேச நிருவாகம் முழுவதும் தும்பறை திஸாவையின் பரிபாலனத்தில் இருந்;து வந்திருக்கின்றது.  

‘திஸாவ’ எனப்படுபவர் உள்ளுர் நிருவாக அதிகாரிகளில் ஒருவராக விளங்கியவராவார் திஸா அதிகாரி ‘ரட்டேமஹத்தா’ என்ற பெயரிலும் அழைக்கப்படுவதுண்டு. 

1833ம் ஆண்டு  இலங்கையில் சிவில் சேவை நிருவாக முறை (ஊநலடழn ஊiஎடை ளுநசஎiஉந) அறிமுகஞ்செய்யப்படும் வரை  திஸாவ நிருவாக முறையே பேணப்பட்டிருக்கின்றது.

 சரித்தரக் குறிப்புகளிலிருந்து சிங்கள மன்னர்களது காலமுதல் தும்பறைப் பள்ளத்தாக்குப் பிரதேசமெங்கும் படகுச் சேவையாளா;களாகவும், பயிர்ச் செய்கையாளர்களாகவும்  வியாபாரிகளாகவும் அறிமுகமாகிய கும்புக்கந்துறை முஸ்லிம்கள் ஆரம்பத்தில்  ஆற்றங்கரையை அண்டிய பகுதிகளிலேயே குடியேறியுள்ளனர். 

தெல்தெனிய முஸ்லிம்கள் தொன்று தொட்டு வியாபாரிகளாக விளங்கினர் என்பதற்கு  ஆங்கிலேய அதிகாரி ஸோ; ஜோன் டொய்லி வழங்கும் தகவல்களில் அரசன்  ஸ்ரீவிக்ரம ராஜசிங்கனும், அவனது குடும்பத்தவர்களும் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டவேளை அவர்களுக்குத் தேவையான ஆடை - அணிகலங்கள் தெல்தெனியில் வைத்து தம்பி முதியன்ஸே என்பவரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

ழூ  .ழூ(திவயின 2012.06.18)  குறிப்பிட்ட தகவலில் ‘தெல்தெனிய தம்பி முதியன்ஸே’யின் பெயர் வழங்கப்படாதபோதும்  அவர் ஒரு முஸ்லிம் வியாபாரியாக இருந்திருக்க வேண்டும் என ஊகிக்க முடிகின்றது.(தொடரும்)

Post a Comment

Previous Post Next Post