மனிதா
இதயங்களின் ஓலங்கள்
உன் காதில் விழவில்லையா..
கண்ணீரால்
ஆற்றுப்படுத்த முடியாத
வார்த்தைகளாலும்
வடித்திட இயலாத
எத்தனை எத்தனை
குமுறல்களில்
எரிந்துமாய்கிறது இதயங்கள்
சரிந்த ஏணிகள் தான்
சிகரத்தின் பாதைகள்!
ஆம்.
தோல்வி என்பது
வெற்றியின் ஊக்க மருந்து
வெற்றி என்பது
முயற்சியின்...
தன்னம்பிக்கையின் அடைவு
நிரந்தரமில்லா
புகழ் போதையில்
நிலைத்துத்தான்
நிற்குமா மகிழ்வு...
இரவல் வாங்கிய மூளை...
ஏறி மிதித்தே
ஏற்றங்கள் காணும்
முகஸ்துதி பாடியே
மாலைகள் வாங்கும்
சூழ்ச்சிகள் செய்தே
பாராட்டு வாங்கும்
என்றுதான் மாறும்
இன்றுள்ள போலிகள்
ஓ.....
மனிதத்தை உறங்க வைத்து
மனசாட்சிகள் விலை போகிறதா...!
Tags:
கவிதை