Ticker

6/recent/ticker-posts

தீராத தலைவலி

எனது வயது 47. என் பாரம் 80kg. எனது நோய் என்னவென்றால் சில காலமாக (சுமார் 3 வருடம்) தலைவலி உள்ளது. கண்களை பரிசீலித்து கண்ணாடியும் போட்டேன்.

சிகிச்சை எல்லாம் எடுத்தேன். ஒன்றுக்கும் குணமில்லை. பயணங்கள் கால்நடையாக சென்றாலுமோ அல்லது வாகனத்தில் சென்றாலுமோ தலைவலி அதிகரித்து வாந்தியும் வருகிறது. இதை நினைக்கும் போது வாழ்க்கை வெறுக்கிறது. இது ஏன்? டாக்டர் உங்கள் பதிலை எதிர்பார்த்திருக்கிறேன்.


தலைவலி ஏற்பட்டால் அது உடல், உள நலன்களைப் பாதிப்பதோடு தொழிற்திறனில் பின்னடைவு குடும்ப மற்றும் சமூக உறவுகளில் பாதிப்பு உட் பட பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. 

நாம் அனைவரும் எமது வாழ்க் கையில் ஏதாவது ஒரு நாளில் தலையிடி யினால் பாதிக்கப்பட்டிருப்போம். எமது முன்னோர்களில் இளம் வயதினரி டையேயும் வயோதிபர்களிடையேயும் தான் தலைவலி அதிகமாகக் காணப்பட் டது. ஆனால் தற்போது வயது வித்தி யாசமின்றி சிறு வயதினருக்குக் கூட தலைவலி ஏற்படுகின்றது. இதற்கான காரணங்கள் பல.

வாழ்க்கையில் தகுதிக்கும் மிஞ்சிய இலட்சியங்களை ஏற்படுத்தி அந்த இலக்குகளை அடைவதற்காக வேண்டி இரவு பகல் என உடல் நலத்தையும் மன நலத்தையும் பொருட்படுத்தாது உழைப்பதன் மூலம் மூளை உட் பட சகல உறுப்புக்களுக்கும் பாரிய அழுத்தம் ஏற்படுகிறது.

இதற்குக் காரணம் Social Race எனப்படும் சமூகப் போட்டியேயாகும். மூளை எமது உடம்பிலுள்ள மிருது
மூளை எமது உடம்பிலுள்ள மிருது வான உறுப்பாக இருப்பதோடு இல குவில் தாக்கங்களுக்குட்படக் கூடும் என்பதால் மூளையை அல்லாஹ் பாதுகாப்பான இடத்தில் தான் வைத் துள்ளான். 

மண்டையோடும் மண்டையோட் டுக்கு வெளியே தடிப்பான உறுதியான தோல் மண்டையோட்டுக்குள்ளே பல மென்சவ்வுகள் அதிர்ச்சியைத் தாங்கு வதற்காகவும் மூளையைக் குளிராக வைப்பதற்காக ஒரு திரவப் பதார்த்தம் போன்ற அமைப்புக்கள் உள்ளன. 

ஆனால் மேற்கூறிய அமைப்புக ளுக்கு குந்தகம் ஏற்பட்டால் அல்லது தொடர்ச்சியான மன அழுத்தம் ஏற் பட்டால் மூளையின் தொழிற்பாடுக ளுக்குக் குந்தகம் ஏற்படும். இதில் நாம் உண்ணும் உணவு வகைகள் மிகவும் முக்கியம். செயற்கை உணவு சுவையூட்டிப் பொருட்களும் உணவு வகைகளைக் கவர்ச்சியூட்டுவதற் காகச் சேர்க்கப்படும் பல நிறங்களைக் கொண்ட இரசாயனப் பொருட்களும் இதில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. பல ஆராய்ச்சிகளின் படி மேற்குறிப் பிட்டுள்ள இரசாயனப் பொருட்கள் மூளையின் சாதாரண தொழிற்பாட்டை மாற்றியமைத்து பிள்ளைகளுக்கு கட் டுப்படுத்த முடியாத அதிதீவிரச் செயற் பாட்டு நிலை உருவாகுதல் ஞாபக மறதி தலையிடி போன்றவைகளை ஏற்படுத்துகின்றன.

அத்துடன் பல இயற்கை உணவுப் பொருட்கள் கூட ஒரு சிலருக்கு அலர்ஜி எனப்படும் ஒவ்வாமையை உருவாக்கி தலைவலியை ஏற்படுத்தலாம். உதாரண மாக ஒரு சிலருக்கு பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்களான பட்டர், சீஸ் போன்றவைகள் கூட தலையிடியை உரு வாக்கலாம்.

ஆனால் மேற்கூறிய உணவுப் பொருட்களினால் ஏற்படுகின்ற தலை Jடிக்கான காரணங்களை ஆய்வு கூட பரிசோதனைகள் மூலம் நிர்ணயிப்பது மிகவும் கடினமான விடயமாகும். பல பரிசோதனைகள் செய்தும் நோயை நிர்ணயிக்க முடியாவிட்டால் அதை மூளையின் தொழிற்பாட்டுடன் தொடர் புடைய ஒரு நிலை என (Functional disorder) என வைத்தியர்கள் முடிவு செய்வார்கள். ஆனாலும் ஒரு முக் கியமான விடயம் என்னவென்றால் மூளையின் கட்டமைப்புடன் தொடர் புடைய சகல பரிசோதனைகளையும் செய்து இறுதியாகவே Functional disorder என முடிவு செய்யப்படும்.

எனவே இவ்வாறு தொடர்ச்சியா தலைவலியினால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்களை ஒரு சில நிமி டங்கள் பேசி தகவல்களை எடுத்து மருந்து கொடுப்பதை விடவும் தலை வலி ஆரம்பித்த காலம் எந்நேரத்தில் ஏற்படுகின்றது. எக்காரணிகள் தலை வலியைக் கூட்டுகின்றன. தலைவலி ஏற்பட்டால் எவ்வளவு நேரம் நீடிக் கின்றது என்பன உட்பட வேறு நோய் அறிகுறிகள் போன்றவற்றையும் விபரமாக ஆராய்ந்து நோய் நிர்ணயிக் கப்பட்ட பின்பே சிகிச்சையளிக்கப்படல் வேண்டும்.

அத்துடன் எவ்வகையான உணவு வகைகளை உட்கொண்டால் தலைவலி ஏற்படுகின்றது என்பதை நோயாளிகளே நுணுக்கமாக அவதானிக்க வேண்டும்.

அத்துடன் மன அழுத்தமும் தொடர்ச்சியான தலையிடியை ஏற்படுத்தும். இது தவிர தலையிடியை ஏற்படுத்தக்கூடிய மேலும் பல காரணிகள் உள்ளன. நவீன வைத்தியத் துறையில் பல சிகிச்சை முறைகள் இருந்தாலும் கூட நோய்க்கான காரணத்தை அடிப்படையாகக் கொண்டே சிகிச்சையளிக்கப்படு கின்றது.

யூனாளி வைத்தியத்துறையிலும் பல சிகிச்சை முறைகள் உள்ளன. விசேட LDIG Migrain LDDDLD Tension headache போன்ற நோய்களுக்கு யுனானி மருந் துடன் ஹிஜாமா எனப்படும் ரசூல் (ஸல்) அவர்களின் சிகிச்சை முறையினால் சிறந்த விளைவுகளைப் பெற்றுள்ளோம்.

இங்கு கேள்வி கேட்டிருப்பவர் தான் வாகனத்திலோ அல்லது நடந்தோ பிர யாணம் செய்தால் தலைவலி ஏற்படு வதாகவும் இதற்கான காரணத்தையும் வினவியுள்ளார். 

இங்கு குறிப்பிட் டுள்ள தகவல்களை ஆராய்ந்தால் இது Exertion Headache எனப்படும் நிலை செப்படும் நிலை இருப்பது போல் தோன்றுகின்றன. இவர்கள் பிரயாணம் செய்யும் போது அதிகளவு நீர் பருகுவது நன்று. 

இறுதியாக வாசகர்களுக்கு ஒரு செய்தியாக அதாவது தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பது ஒரு முதுமொழி. எனவே நீண்ட நாட்களாக தலையிடியினால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் காலம் தாழ்த்தாது தகுதியான வைத்தியர் ஒருவரை நாடி சிகிச்சை பெற்றுக் கொள்ளவும்.
DR.NASEEM

Post a Comment

0 Comments