Ticker

6/recent/ticker-posts

நிராகரித்தல்...!


என்னைவிட நான்
அழகாய் இருந்திருக்க வேண்டும் என்று
எப்போதும் நினைத்ததில்லை

ஆனால்
உன்னைவிட நான்
அழகாய் இருந்திருக்க வேண்டாமா என்று
இப்போது நினைக்கிறேன்.

ஏனெனில்
உன் நிராகரிப்பில்
அந்த அழகிலும்
ஒரு காரணமிருக்குமோ
என்று எண்ணியதால்

என்னை விட நான்
அறிவாய் இருந்திருக்க வேண்டும் என்று
எப்போதும் நினைத்ததில்லை.

ஆனால்
உன்னை விட நான்
அறிவாய் இருந்திருக்க வேண்டாமா
என்று இப்போது நினைக்கிறேன்.

ஏனெனில்
உன் நிராகரிப்பில்
அந்த அறிவிலும்
ஒரு காரணம் இருக்குமோ
என்று எண்ணியதால்.

என்னைவிட நான்
வசதியாய் இருந்திருக்க வேண்டும் என்று
எப்போதும் நினைத்ததில்லை.

ஆனால்
உன்னைவிட நான்
வசதியாய் இருந்திருக்க வேண்டாமா என்று
இப்போது நினைக்கிறேன்.

ஏனெனில்
உன் நிராகரிப்பில்
அந்த வசதியிலும்
ஒரு காரணம் இருக்குமோ
என்று எண்ணியதால்.



Post a Comment

0 Comments