கல்முனையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் இப்ராலெப்பை முஹம்மது ஹனீபா மற்றும் முஹைதீன் பாவா உதுமானாச்சி ஆகியோரின் ஐந்தாவது மகளாவார்.
ஏறாவூரைச் சேர்ந்த உதுமாலெப்பை முஹம்மது மபாஸ் என்பவரின் மனைவியான இவர் ஐந்து குழந்தைகளின் தாயும் ஆவார்.
கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும் கல்முனை மஹ்மூத் மகளிர் மகா வித்தியாலயத்தில் உயர் கல்வியையும் கற்றுக் கொண்டார்.
பாடசாலைக் காலம் முதல் வாசிப்பதில் தன்னார்வம் கொண்ட இவர் தமிழ் தினப் போட்டிகளில் கலந்து கவிதை, கட்டுரை, சிறு கதை போன்ற வற்றில் சான்றிதழ்களும் பெற்றுக் கொண்டுள்ளார்.
தொடர்ந்தும் தினகரன், தினமுரசு, நவமணி போன்ற பத்திரிகைகளிலும் பல்வேறு ஆக்கங்களை எழுதியுள்ளார்
2013 ஆம் ஆண்டு முதல் கடந்த எட்டு வருடங்களாக முக நூலை தளமாகக் கொண்டு பல கவிதைகளையும் கட்டுரைகளையும் சிறந்த கருத்துக்களையும் எழுதி வருகின்றார்.
அத்தோடு 2015ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற வலம்புரி கவிதா வட்டத்தில் கலந்து கொண்டு "சமுத்திரத் தாயே" எனும் தலைப்பில் சுனாமி தொடர்பான தன் கவிதையை வாசித்துள்ளார் என்பதும் சிறப்பாக குறிப்பிடத்தக்கது.
மேலும் "மனம் தொடும் மலர்கள்" என்ற கவிதைத் தொகுதியில் இவரது இரண்டு கவிதைகள் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது ஸ்ரீலங்கா பென் கிளப்பில் உறுப்பினராக இருக்கும் இவர் தனது கவிதைகளை நூலுருவாக்க வேண்டும் என்ற அவாவுடன் வாழ்ந்து வருகின்றார்.
இவரது எண்ணம் நிறைவேற எல்லாம் வல்ல இறையோனை பிரார்த்திக்கின்றோம்.
இன்ஷா அல்லாஹ்.
தகவல்.
சம்மாந்துறை மஷூறா.
தலைவி,சிறீலங்கா பெண் கிளப்.
0 Comments