யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட மீரா மொகிதீன், சித்தி றாபியாவின் மூன்றாவது மகளாவார்.
கண்டி நகரச் சேர்ந்த முஹம்மது யாசீனை திருமணம் செய்து கொண்டார்
நான்கு ஆண்பிள்ளைகளின் தாயும் ஆவார்.
தற்போது நீர்கொழும்பில் வசித்து வருகின்றார்.
யாழ்ப்பாணம் கதீஜா மகா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை கல்வி கற்றார்.சிறு வயது முதல் வாசிப்பில் தன்னார்வம் கொண்டவர்.
தமிழ்தினப் போட்டிகளில் சிறுகதை, கட்டுரை,அறிவுக்களஞ்சியம் போன்றவற்றில் சான்றிதழ்களும், பரிசுகளும் பெற்றுக் கொண்டவர்.
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட இனக்கலவரத்தில் இடம்பெயர்ந்து கம்பளை சாகிராக் கல்லூரியில் உயர்தரத்தை பூர்த்தி செய்து சித்தியடைந்தார்.
பின்னர் மருதானை தொழில்நுட்பக் கல்லூரியில் உயர்தர கணக்கியல் டிப்ளோமா கற்கையை கற்றார்.
அங்கும் தன் எழுத்தார்வத்திற்கு தீனி போடுவதற்காய் கவிதை, விவாதம், அறிவுக்களஞ்சியம் போன்ற கலை நிகழ்வில் கலந்து வெற்றிச் சான்றிதழும் பரிசுகளும் பெற்றார்.
1991 ம் ஆண்டு இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் கவிஞர் அல் அஸுமத் அவர்கள் நடாத்திய கவிதைச் சாளரத்தில் அவரது கன்னிக் கவிதை ஒலிபரப்புச் செய்யப்பட்டது.
கவிஞர் அல் அஸூமத்தின் கவிதைச் சாளரம் என்னும் புத்தகத்திலும் "அகதி" எனும் தலைப்பில் கவிதை பிரசுரிக்கப்பட்டது.
2011 தொடக்கம் முகநூலைத் தளமாகக் கொண்டுகவிதைகளும், சிறந்த கருத்துக்களையும் எழுதி வருகிறார்.
அத்துடன் Srilanka Pen club இல் உபதலைவியாக நியமிக்கப்பட்டு திறம்பட இயங்கி வருகிறார்
தான் எழுதிய கவிதைகளை நூலாக வெளியிட வேண்டும் என்பதே இவரது எதிர்கால கனவாகவுள்ளது.இவரது கனவு நனவாக எம் பிராத்தனைகள்.
தகவல்;
சம்மாந்துறை மஷூறா சுஹூருடீன்
0 Comments