மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-36 (வரலாறு-பாகம்-2)

மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-36 (வரலாறு-பாகம்-2)


பலகொள்ள -36
மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நீரில் மூழ்கிய பிரதேசங்களில் வாழ்ந்த மக்களுக்காக அமைக்கப்பட்ட புதிய குடியேற்றத் திட்டங்கள் வரிசையில் பலகொள்ளயும் ஒன்றாகும். மூன்று இனத்தவர்களும் சமமாகக் குடியமர்த்தப் பட்டிருக்கும் பலகொள்ளக் குடியிருப்பு பூர்வீக வரலாற்றைக்கொண்ட தும்பறையின் ஒரு பகுதியாக விளங்குகின்றது.

கண்டிய அரசன் இரண்டாம்  விலதர்மசூரியனின் (1687-1707) மறைவைத் தொடர்ந்து கண்டி இராச்சியத்தின் அரசனாக  தென்னிந்தியா - தஞ்சாவூர் அரசியின்  குமாரன்  ஸ்ரீநரேந்தர சிங்கன் (1707-1739)  புதிய ஆட்யாளராகப் பதவி ஏற்றான். அவனது அரசியல் பிரவேசம் கண்டிய அரசியலில்  தமிழர் செல்வாக்கு மேலோங்குவதற்கு வழிவகுத்ததென வரலாற்றாசிரியர் கூறுவர். தனது ஆட்சிக்கு கண்டிய சிங்களப் பிரதானிகள் போதிய ஆதரவை வழங்காததை உணர்ந்துகொண்ட  மன்னன் நரேந்திர சிங்கன் பாதுகாப்பு நலன் கருதி  குண்டசாலையில் மாளிகை அமைத்து  ஆட்சி புரிந்ததாக வரலாற்றில் குறிப்பிடப்படுகின்றது. அரசருக்குச் சொந்தமாக விளங்கிய வயல் நிலங்கள் அமைந்த பகுதியே இன்று ரஜவெல என அழைக்கப்படுகின்றது.

84.8 சதுர கிலோ மீற்றர் பரப்பில் அமைந்துள்ள குண்டசாலை கண்டி மாவட்டத்தில் அதிகமான கிராமங்களை உள்ளடக்கிய நிருவாகப் பகுதிகளுள்  ஒன்றாகும். சதுர கிலோ மீற்றர் பரப்பில் சராசரியாக 1315 பேர் வாழும் குண்டாசாலை எண்பது கிராம அதிகாரிப் பிரிவுகளையும்  253 கிராமங்களையும் கொண்டிருக்கின்றது.   2005ம் ஆண்டைய சனத்தொகை எண்ணிக்கையிலிருந்து 111554 பேர் குண்டசாலையில் வாழ்ந்ததாக அரசாங்க அறிக்கைகள் கூறுகின்றன. பூர்வீகத் தமிழ்க்குடிகளும், தமிழ்த் தோட்டத்தொழிலாளர்களும் கணிசமான எண்ணிக்கையினராக வாழும் ஒரு தொகுதியாக குண்டசாலையைக் குறிப்பிட முடியும். 

ஆங்கிலேயர் காலத்தில் பெருந்தோட்டமாக விளங்கிய பள்ளேகல பகுதிகள் முன்னர் பலகொள்ள என அழைக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவைகளாகும். ~கெல|(மசூட) என்பது  வனம் என்ற கருத்தைத் தருகின்றது. அக்காலை பெரும் வனப்பகுதிகள் பல ~கெல| என்ற சொல்லோடு இணைத்து அழைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் லபுகல, தலவாக்கல, மடுல்கல என்பன சில.  பள்ளேகல பெரும் நிலப்பரப்பு மேல்த்தோட்டக்காடு, கீழ்த்தோட்டக்காடு என இருபகுதிகளாக அழைக்கப்பட்டு வந்துள்ளது. 

ஆங்கிலேயர் அக்காலை பள்ளேகல பிரதேசம் முழுவதும் கொக்கோ போன்ற பணப்பயிர்களைப் பெருமளவில் பயிர்செய்திருந்தனர். விசாலமான பள்ளேகல நிலப்பகுதி சமீப கால முதல்  குடியிருப்புப் பகுதிகள், அரசாங்கக் காரியாலயங்கள், கைத்தொழிற்பேட்டை என்பனவற்றால் சிறப்புற்று வருவது குறிப்பிடத்தக்கது.   முன்னர் தெல்தெனிய நகர், அஞ்சுகடை, அளுத்வெல  போன்ற பகுதிகளில் வாழ்ந்த மக்கள் பள்ளேகலப் பெருந்தோட்டத்தின் மத்தியில் அமைந்திருக்கும் பலகொள்ளக் குடியேற்றத்திட்டத்தில் புதிதாகக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். விக்டோரியாத் திட்டம் அமுல்செய்யப்படுவதற்கு முதலில்  குறிப்பிட்ட பகுதிகளில் 150க்கும் அதிகமான முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்ததிருக்கின்றன.  தெல்தெனிய நகரில் மாத்திரம்  ;முஸ்லிம்களுக்குச் சொந்தமாக விளங்கிய இருபது கடைகளளோடு,   நகரில் அமைந்திருந்த மஸ்ஜிதும் முஸ்லிம் பாடசாலையும் நீரில் மூழ்கியமை குறிப்பிடத்தக்கது.   விக்டோரியாத்; திட்டத்தால் நீரில் மூழ்கடிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த மக்களில் ஒரு பகுதியனர் 1983ம் ஆண்டு முதல் பலகொள்ளையில் புதிதாகக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். ஒரு குடும்பத்திற்கு முப்பது பேர்ச்சஸ் நிலம் பங்கீடு செய்யப்பட்;டிருக்கின்றது. அவை தவிர மேலும் முப்பது குடும்பங்கள் உள்ஹிட்டியாவையிலும் குடியேற்றப்பட்டதோடு, அங்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரை ஏக்கர் தரை நிலமும் இரண்டரை ஏக்கர் வயல் நிலமும்; இழப்பீடாக வழங்கப்படடிருக்கின்றது.

உள்ஹிட்டியாவையில் குடியேற்றப்பட்டவர்களில் ஒரு பகுதியினர்  சமூக - கலாசார நலங்கருதி அங்கிருந்து வெளியேறிச் சென்றபோதும், குறிப்பிட்ட சில குடும்பங்கள் மாத்திரம் அங்குதொடர்ந்தும் வாழ்ந்து வருவதோடு, சமயக் கிரியைகளை நிறைவேற்ற ஒரு மஸ்ஜிதும் குடியேற்றத்திட்டத்தில்  அமைக்கப்பட்டிருக்கின்றது.
(தொடரும்)

 



------------------------------------
வாசகர்கள் தங்கள் ஆக்கங்களை 
வேட்டை Email மூலம் அனுப்புங்கள்
     Email-vettai007@yahoo.com       

Post a Comment

Previous Post Next Post