Ticker

6/recent/ticker-posts

Ad Code



உறங்காத இரவுகள்!


கண்ணுறங்கும் சாமத்திலே
கண்ணயராக் கண்களோடு 
கன்னியிவள் நெஞ்சத்திலே 
உன்னினைவைச் சுமந்து 
முட்படுக்கை மீதினிலே 
மருகித்தான் கிடக்கிறேன்
வரட்சி கண்ட நிலத்தினிலே
மழையாய் பெய்ய வருவாயா?

கண்களில் கண்ணீர் ஒழுக
நினைவுகள் எல்லாம் பிரளயமாக
கனக்கும் இதயம் திறந்து படிக்க 
கணப்பொழுதில் நீ வாராயோ
ஊனிலும் உயிரிலும் கலந்து விட்டாய் 
உன்மத்தம் எனும் பரிசைத் தந்து விட்டாய்

கனவு காண்பது சரிதானா?
உன் காதல் பரிசு இதுதானா?
மீதியைத்தேடி ஒரு பாதி
நதியாய் ஓடி வருகிறது
நதியும் ஒருநாள் கடல் சேரும்
நாடியே வருவாய் எனை உணர்ந்து

 

வாசகர்கள் தங்கள் ஆக்கங்களை 
வேட்டை Email மூலம் அனுப்புங்கள்
Email-vettai007@yahoo.com  

Post a Comment

0 Comments