Ticker

6/recent/ticker-posts

Ad Code

உலகத்தை ஆச்சரியப்படவைத்த வடகொரியா அதிபரின் பேச்சு

வடகொரியாவில் 5 ஆண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். 

வடகொரியா நாட்டு அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டின் அதிபராக பதவியேற்று 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி நடைபெற்ற கட்சி பொதுகூட்டத்தில் பேசிய அவர், வடகொரியாவின் 2022-ம் ஆண்டின் முக்கிய இலக்கு பொருளாதார வளர்ச்சியும், பொதுமக்களின் வாழ்க்கைத்தரம் முன்னேற்றமும் தான். வடகொரிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் 5 ஆண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.

இன்றைய பொருளாதார சூழலில் பொதுமக்களுக்கு உணவு தான் முக்கியமே தவிர அணு ஆயுதங்கள் அல்ல. வளர்ச்சி திட்டங்களில் தான் இனி முழு கவனமும் செலுத்தப்படும். இந்த கொரோனா தொற்று நமக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இதை எதிர்கொள்ள நாட்டில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் எந்த வித தொய்வும் இன்றி ஏற்பாடுகள் செய்திருத்தல் வேண்டும். கொரியாவில் நிலையற்ற ராணுவ சூழல் மற்றும் சர்வதேச சூழலை சமாளிக்க நாட்டின் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 

அதிபர் கிம்மின் உரையை கேட்ட உலக நாடுகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளது. 

Post a Comment

0 Comments