Ticker

6/recent/ticker-posts

Ad Code



கறிவேப்பிலையின் பயன்கள்


கறிவேப்பிலையில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. கறிவேப்பிலையைக் கொண்டு நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.

நீரிழிவு முதல் மலச்சிக்கலை வரை பலவற்றை கறிவேப்பிலையைக் கொண்டு சரிசெய்லாம்.

கருவேப்பிலையில் ஏகப்பட்ட நன்மைகள் ஒளிந்திருக்கின்றன. கறிவேப்பிலையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின்-ஏ போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

கறிவேப்பிலையை சாறு எடுத்தும் பருகலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.

கறிவேப்பிலையை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தி கல் ஈரலில் ஏற்படும் அழற்சியின் அபாயத்தைக் குறைக்கிறது.
கறிவேப்பிலை செரிமான அமைப்பை வலுப்படுத்த உதவுகிறது.

வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை சாப்பிடுவது வயிற்று வலியைப் போக்க உதவுகிறது.
 மலச்சிக்கல், அமிலத்தன்மை , அஜீரண கோளாறு ஆகியவற்றை நீக்குகிறது.

தயிர் அல்லது மோர் கலந்த கறிவேப்பிலையை தினமும் உட்கொள்வது இரத்த சோகையைக் குணப்படுத்துகிறது.  
 உடல் எடையை குறைக்க முயற்சிப்பவராக இருந்தால், ஒரு முறை கறிவேப்பிலையை பயன்படுத்தி பாருங்கள்.
கறிவேப்பிலை இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலை சீராக்க உதவுகிறது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை சாப்பிடுவது பார்வையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
முடியை வலுவாக்குகிறது. 

வாசகர்கள் தங்கள் ஆக்கங்களை 
வேட்டை Email மூலம் அனுப்புங்கள்
Email-vettai007@yahoo.com  

Post a Comment

0 Comments