சிங்கத்தை தூக்கிச் செல்லும் பெண்-video

சிங்கத்தை தூக்கிச் செல்லும் பெண்-video

மத்திய கிழக்கு நாடான குவைத்தில் உள்ள ஒரு வீதியில், மாது ஒருவர் சிங்கம் ஒன்றைக் கையில் தூக்கிச் செல்வதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

கூண்டிலிருந்து தப்பித்து குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த அந்தச் சிங்கம், தலைநகர் குவைத் சிட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்தச் சிங்கம் வீதிகளில் சுற்றித் திரிவது குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்தச் சிங்கத்தைச் செல்லப் பிராணியாக வளர்ப்பவர் என்று கூறப்படும் அந்த மாது, அதைத் தூக்கிச் செல்வதைக் காணொளி காட்டியது.

 அவருடைய பிடியில் இருந்து தப்பிக்க அந்தச் சிங்கம் சிரமப்படுவதும் அக்காணொளியில் தெரிந்தது.

டுவிட்டரில் அந்தக் காணொளி 450,000க்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் பதிவிட்ட கருத்துகளில், தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.

அந்தச் சிங்கம், அந்த மாது மற்றும் அவருடைய தந்தைக்குச் சொந்தமானது என்று சுற்றுப்புறக் காவல்துறையினர் கூறினர். அந்தச் சிங்கத்தைப் பிடித்து, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க அவர்கள் உதவினர்.

குவைத்தில் சிங்கம், புலி போன்ற விலங்குகளைச் செல்லப்பிராணிகளாக வளர்ப்பது சட்டவிரோதமானது. என்றாலும், அங்கு அது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது.


Post a Comment

Previous Post Next Post