ஹுலுகங்கை-39
கண்டியிலிருந்து வத்தேகம - பன்வில - பம்பரல்ல பாதையில் மலைச்சரிவான இடத்தில் அமைந்திருக்கும் ஹ{லுகங்கைப்பட்டினம் மகாவலியுடன் சங்கமமாகும் ஹ{லுகங்கைக்கரையில் அமைந்திருக்கின்றது.
ஆற்றின் பெயரோடு இணைந்ததாக பட்டினத்தின் பெயரும் அழைக்கப்படுவது சிறப்பானதாகும்.
ஹலுகங்கையைப் போன்று திக்கோயா, ஹல்கரனோயா, நானுஓயா எனப் பல பட்டினங்கள் ஆற்றங்கரைகளோடிணைந்த பட்டினங்களாக விளங்குவதைக் குறிப்பிடலாம்.
ஹலுகங்கைப் பிரதேசத்தில் காணப்படும் அலகொல எஸ்டேட், ஹாகல எஸ்டேட், கோம்பர எஸ்டேட், மடுல்கல எஸ்டேட், மாவுஸா எஸ்டேட், கலாபொக்க எஸ்டேட் போன்ற பெருந்தோட்டங்களுக்கு மத்தியில் அமைந்த இப்பட்டினம், மூவினத்தவர்களும் வாழும் பட்டினமாக விளங்குவது சிறப்பானதாகும். சுமார் நூற்றுப்பதினைந்து முஸ்லிம் குடும்பங்கள் வாழும் குடியிருப்பின் ஆரம்பக்குடியாளர்கள் தென்னிந்திய முஸ்லிம்களாவர்.
வர்த்தக நோக்கை இலக்காகக் கொண்டு ஹ{லுகங்கையில் கால்பதித்த இந்திய தமிழ், முஸ்லிம் வியாபாரிகள் அதனை ஒரு சந்தைக் குடியிருப்பாக அபிவிருத்தி செய்தமை வரலாறாகும். பெரும் எண்ணிக்கையிலான தோட்டத் தொழிலாளர் குடும்பங்களும் குடியிருப்பில் வாழ்ந்து வருகின்றன.
முஸ்லிம்களைப் போன்று தமிழ் வியாபாரிகளும் புகழோடு விளங்கிய ஹுலுகங்கை நகரிலிருந்து 1955ம் ஆண்டுகளைத் தொடர்ந்து பலர் பொருளாதார நலன் கருதி நாட்டிலிந்து வெளியேறிச் சென்றுள்ளதாக அறிய முடிகின்றது.
பட்டினத்தில் இந்திய வம்சாவளியினரோடு குறிப்பிட்ட சில பாகிஸ்தானிய வம்சாவளியினரும் இன்றும் வாழ்ந்து வருவது கண்கூடு. பட்டினத்தில் சுமார் நாற்பது கடைகள் முஸ்லிம்களுக்குச் சொந்தமானவைகளாகும்.(தொடரும்)
Vettai Email-vettai007@yahoo.com
0 Comments